மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்
இந்தியா

கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

Social Vision
Last updated: 2024/06/19 at 4:36 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
 கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்
இன்று (19.6.2024) கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில்  பிரவீன்குமார். வயது 26, த/பெ. கணேசன் நேற்று அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும்,  சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் சேகர். வயது 59. த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள். உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூராய்விற்குப் பின்பு தெரியவரும்.
மேற்கண்ட 26 நபர்களில், வடிவு, த/பெ சுரேஷ், மற்றும் கந்தன் த/பெ சின்னு ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக. சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம். சேலம். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட. தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ்,  மற்றும்
மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.
மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி. வயது 49, த/பெ.கனகு என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர்விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது..
முதலமைச்சர் அவர்களுக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்தவுடன். உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்.எ.வ.வேலு மற்றும்  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு,  ரஜத் சதுர்வேதி, அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர்  தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  கவிதா. திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பாண்டிசெல்வி, திருக்கோவிலூர். உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தன். உதவி ஆய்வாளர்  ஷிவ்சந்திரன். காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர். திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக CBCID வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்கள்.
TAGGED: @CMO office, @cmomkstalin, CMO MK.Stalin, கள்ளக்குறிச்சி சாராய மரண வழக்கு சிபிசிஐடி மாற்றம்
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.

February 22, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

March 4, 2025
தமிழ்நாடு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3151 போதாது: டன்னுக்கு குறைந்தது ரூ.1000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்!பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

March 6, 2025
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
AITUC
தமிழ்நாடு

பழைய பென்சின் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்.

February 6, 2024
Uncategorized

ஜூலை 10-ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

June 10, 2024

மேலும் படிங்க

இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?