இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து
தருமபுரி ஜூன் -18,
தருமபுரி இந்தியன் வங்கி ஏடிஎம் முன்பு பாதாளச்சாக்கடை கால்வாய் குழி திறந்த நிலையிலேயே உள்ளது குழியில் விழுந்து விபத்து ஏற்படும் முன் குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி நகரம் பென்னாகரம் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி மெயின் கிளை வங்கி முன்பு 24 மணிநேரமும் செயல்படும் ஏடிஎம் உள்ளது.வங்கிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணபரிவரத்தனைக்கு வந்து செல்கின்றனர்.மேலும் வங்கியின் முதல் தளத்தில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும் செயல்பட்டு வருகிறது இந்த இடம் தருமபுரி பேருந்து நிலையத்தையெட்டி உள்ள முக்கிய சாலையாகவும் வாகனங்களும் பொதுமக்களும் அதிகமாக கடந்து செல்லும் பகுதியாகும் இந்தியன் வங்கி முன்பு அமைந்துள்ள ஏடிஎம் நுழைவாயில் பாதாளச்சாக்கடை திட்ட கால்வாய் உள்ளது இந்த கால்வாய் சுத்தம் செய்யும் பகுதி திறந்துள்ளது. ஏடிஎம் முன்பு திறந்த நிலையில் குழி இருப்பதால் ஏடிஎம்க்கு பணம் எடுக்க வருவோர் தெரியாமல் சாக்கடை கால்வாய் குழியில் தவறி விழ வாய்ப்புள்ளது எனவே உடனடியாக சாக்கடை கால்வாய் குழியை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

