பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்சோ இணையதள சேவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள போக்சோ இணையதள சேவை (pocsoportal.in.gov.in) – குழந்தை பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் நலனையும் உறுதிபடுத்திட தனிநபர் பராமரிப்பு திட்ட செயலி (Individual Care Plan Application) – தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் நல இல்லங்களையும் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணிப்பு செயலி ( Inspection and Monitoring application )- ஆகியவற்றின் பயன்பாட்டை இன்று தொடங்கி வைத்தோம்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய ஆதரவற்ற கைம்பெண்களுக்கு அரசிடம் இருந்து எளிதில் நலத்திட்ட உதவிகள் கிடைத்திடும் வகையில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைய பயன்பாட்டையும் தொடங்கி வைத்து வாழ்த்தினோம் என தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

