மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு

ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/16 at 2:53 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறை குறித்த கருத்தரங்கம் தருமபுரி அருளருவி அருட் பணி பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
மனித உரிமைசெயல்பாட்டாளர் கே.பி.செந்தில்ராஜா வரவேற்றார்.
ஐந்தாவது அட்டவணை ஆதிவாசிகள் மாநில அமைப்பாளர் ஆ.ரெங்கநாதன் அறிமுகவுரையாற்றினார்.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் சிறப்புறையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன் ஆர்டிஎஸ், இயக்குநர் தர்மலிங்கம்,தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் டி.வெங்கட்டேசன், தமிழ்நாடு பழங்குடி ஆன்றோர் பேரவை மாநிலபொதுச்செயலாளர் எம்.குணசேகரன்,தமிழக பழங்குடி மக்கள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேசினர்.

பழங்குடி மக்களின் உரிமையை நிலைநாட்ட 2006 ம் ஆண்டு ஒன்றிய அரசால் வன உரிமைசட்டம் கொண்டுவரப்பட்டது.தங்கள் வாழ்வாதாரத்திற்காக பட்டியலிடப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் மூன்று தலைமைமுறையாக வாழும் இதர வனம் சார்ந்து வாழ்வோர் குடியிருப்பு மற்றும் வனநிலம் பெறும் உரிமையை பெறுகின்றனர்.இந்த சட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் 4 ஹெக்டர் வரை நிலம் தனிநபர் பெறலாம்.வனம் சார்ந்த வள உரிமையாக தேன்,புளி,கல்பாசம் போன்ற சிறுவன் மகசூல் சேகரிக்கவும் விற்க்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வனத்துக்கு உள்ளேயும் வனத்துக்கு வெளியேயும் மீன்பிடிக்க நீர்நிலைகளை பயன்படுத்தவும் ,கால்நடைகளை மேய்க்கவும் உரிமை வழங்கப்படுகிறது.இந்த சட்டத்தின்படி வேட்டையாடுதல் தவிர அவர்கள் பாரம்பரியமாக பயன் படுத்தி வந்த அனைத்து பாரம்பரிய மற்றும் கலாச்சார உரிமைகள் அனைத்தும் வழங்குகிறது.என கருத்தரங்கில் தெரிவித்தனர்.

இந்த சட்டத்தை செயல் படுத்த ஒவ்வொரு வன கிராமத்திலும் கிராம வன உரிமை குழு அந்தந்த கிராம சபையால் அமைக்க பட்டு நில உரிமை கோரும் மக்களிடம் இருந்து மனு பெறப்பட்டு ஆய்வு செய்ய பட்டு கோட்ட அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யபடும். பின் கோட்ட அளவிலான குழு ஆய்வு செய்து மாவட்ட அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யும். பின் மாவட்ட அளவிலான குழு வன உரிமை வழங்கும்.
இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் சில மாவட்ட நிர்வாகங்கள் சுணக்கம் காட்டினாலும் பல மாவட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறன. வன உரிமை வழங்கிய வால்பாறை, கொடைக்கானல் போன்ற சில இடங்களில் மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களுக்கு அவர்கள் பயிர் செய்யும் நிலங்களுக்கு 2,சென்ட் 3 சென்ட் என்று கொடுத்து ஏமாற்றி உள்ளது. இது பழங்குடி மக்களின் அறியாமையை பயன் படுத்தி மாவட்ட நிர்வாகமே இப்படி செய்வது ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் எப்படி செயல் படுகிறது என்பதற்க்கு ஒரு உதாரணம். என கருத்தரங்கில் தெரிவித்தனர்.
மேலும் ,வன உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை இந்தியா முழுவதும் 23,70,001 மக்களுக்கு 51,75,112,44 ஏக்கர் நிலம் வழங்க பட்டு உள்ளது. ஆனால் வளர்ந்த மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழ் நாட்டில் இதுவரை 12,728 நபர்களுக்கு மட்டுமே வன உரிமை வழங்க பட்டு உள்ளது. இது இந்தியளவில் வெறும் 0.5% மட்டுமே. சமூக வன வள உரிமை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 1,15,180 கிராமங்களுக்கு 1,38,38,711. 50 ஏக்கர் வன நிலம் ஒதுக்க பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 671 கிராமங்களுக்கு மட்டுமே வழங்க பட்டு உள்ளது. இது சராசரியாக தேசிய அளவில் வெறும் 0.58% மட்டுமே. அதுவும் அளவு தெளிவாக குறிப்பிடபடவில்லை. வனம் சார்ந்து வாழும் இதர இன மக்களுக்கு வன உரிமை சட்டம் 2006 படி அங்கு பயிர் செய்தற்கன அடையாளங்கள் மற்றும் ஊர் முதியோர்கள் வாக்கு மூலமே போதுமானது ஆனால் அரசு அலுவலர்கள் அவர்கள் காடுகளில் 75 ஆண்டுகள் இருப்பதற்காண எந்த ஆதரமும் இல்லை என்று சொல்லிகொண்டு கிராம வன உரிமை குழு, கிராம சபை தீர்மானங்களை தன்னிச்ச்சையாக நிரகாரிக்கின்றனர். இதனால் தமிழ் நாட்டில் வனம் சார்ந்து வாழும் ஒருவருக்கு கூட வன உரிமை வழங்க படவில்லை. அதே சமயம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதுவரை 2210 வனம் சார்ந்து வாழ்வோருக்கு 2424 53 ஏக்கர் நிலம் வன உரிமையாக வழங்கபட்டு உள்ளது எனவே ஒட்டு மொத்தமாக பார்த்தால் தமிழக அரசு வன துறை இடையூறுகளால் மிக மந்தமாக செயல்படுகிறது. என குறிப்பிட்டனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சிங்காபுரம் வனப்பகுதியையெட்டி மூன்று தலைமுறைகளாக  வாழ்ந்துவரும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை வனத்துறை வெளியேற்ற கூடாது இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடி அங்கிகாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கருத்தரங்கில் தெரிவித்தனர்.
TAGGED: ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்., வன உரிமைச் சட்டம் 2006
Social Vision June 16, 2024 June 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 12,608 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல். ஆட்சியர் ரெ.சதீஷ் தகவல் 

February 14, 2026
குழந்தைகள் உலகம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிய மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
மாவட்டங்கள்

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.

February 7, 2024
தமிழ்நாடு

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடர் நாளைகூடுகிறது.

February 11, 2024
சாதனையாளர்கள்

இந்திய நாட்டு சுதந்திரத்திற்க்காக வாழ்நாளை அர்பணித்த தியாகி சுப்பிரமணியசிவா

December 19, 2023
தமிழ்நாடு

வரலாறு காணாத வெயில் நன்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணிவரை வெளிவராதிங்க…

April 24, 2024

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?