மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.

Social Vision
Last updated: 2024/06/15 at 2:10 PM
Social Vision
Share
5 Min Read
SHARE
 தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
 அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.
    தருமபுரி அரசு விருந்தினர் மளிகையில்,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தலைமையில் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, முன்னிலையில் இன்று (15.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தருமபுரியில் ஆய்வு கூட்டம் 
    இதனைத் தொடர்ந்து, தருமபுரி வெண்ணாம்பட்டி சாலை பாரதிபுரம் ரயில்வே மேம்பாலம் அமையுள்ள இடத்தினையும், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாக கட்டடம் கட்டுமான பணிகளையும், தருமபுரி சிப்காட் தொழிற் பூங்கா பணி முன்னேற்றம் குறித்தும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 பின்னர் செய்தியாளர் சந்திப்பில் 
  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்ததாவது:-
வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டார்
 ரூ 36.15 கோடியில் வெண்ணாம்பட்டிமேம்பாலம்
    தருமபுரி நகரத்திற்கும் கிராம பகுதிகளுக்கும் இணைப்பு பாலமாக உள்ள வெண்ணாம்பட்டி, பாரதிபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றது. 01.04.2023 அன்று சட்டபேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தருமபுரி, பாரதிபுரம் 66 அடி சாலையில் வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம்  அமைக்கப்படும் என அறிவித்தார்கள். பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு ரூ.36.15 கோடிக்கு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் நில எடுப்பு பணிகள் முடிவுற்று. பணிகள் துவக்கப்படவுள்ளது. ஒவ்வொரு முறை ரயில் கடக்கும் போதும் கதவுகள் அடைக்கும் போது இரண்டு புறமும் 1000-த்திற்கு மேற்பட்ட இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பேருந்துகள், 108 ஆம்புலன்ஸ் போன்றவை 15 நிமிடம் கத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட்டு பணி நிறைவடையும் போது அன்றடும் கிராம பகுதியில் இருந்து நகர பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவதற்கான வழிவகை ஏற்படும்.
 தருமபுரியில் ரூ 36.63 கோடியில்  கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம்
புதிய கட்டப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைச்சர் பார்வையிட்டார்
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20.01.2022 அன்று தருமபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம் கட்ட அரசாணை எண்.468 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக பிரிவு R.A.-1(2) நாள்: 26.09.2022 மூலம் ரூ.36.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.
    இக்கட்டடம் கட்ட சுமார் 4.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  மேலும் இக்கட்டடம் தரைதளத்துடன் கூடிய ஐந்து தளம் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் மொத்த பரப்பளவு 1.38 இலட்சம் சதுர அடி ஆகும். தரைதளத்துடன் கூடிய ஐந்து தளத்தில் மாவட்ட ஆட்சியர் அரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பயிற்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நகர் ஊரகமைப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட சமுக நல அலுவலர், இந்து சமய அறநிலைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அறை மற்றும் மற்ற பிற துறைக்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட உள்ளது.
    இப்புதிய கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் வசதி, மின்தூக்கி வசதி மற்றும் நீரின் அவசியம் கருதி மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது. தற்போது ஆறு தளத்திற்கான கட்டடமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு உட்புற பூசு வேலை நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் தொழில்வளர்ச்சியில் வேகமாக வளரும் நிலை 
தருமபுரி சிப்காட்டில் ஓலா நிறுவனம் முன்பதிவு 
தருமபுரி சிப்காட் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு
  தருமபுரி புறநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள தடங்கம், பாலஜங்கமனஅள்ளி, அதகப்பாடி, ஆகிய கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள சிப்பாட் பகுதியில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் தடையில்லா சான்று கிடைத்தவுடன் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க உள்ளது. OLA நிறுவனம் 700 ஏக்கர் பரப்பளவில் தொழில் துவக்க முன்பதிவு செய்துள்ளது. சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஓசூர் சிப்காட் தொழிற் பேட்டையில் தற்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. அதை அடுத்து தருமபுரி சிப்காட் தொழில் பேட்டையிலும் தொழிற்சாலைகள் அதிகம் வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. ஓலா நிறுவனம் இங்கு தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    தருமபுரி சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்பை பயன்படுத்தி தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் வேகமாக வளரும் நிலை ஏற்படும்.  தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் தருமபுரி மாவட்டம் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதால் தருமபுரி மாவட்டம் வேகமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
 ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரேற்றும் திட்டம்
    மேலும், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மழைக்கால வெள்ள உபரிநீரினை சின்னப்பம்பட்டி, நவலை மற்றும் சிந்தல்பாடி ஏரிகளுக்கு மொரப்பூர், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீரேற்றம் செய்வதன் மூலம் விவசாய நிலங்கள் பெரிதும் பயன்பெறும். இந்த திட்டம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு முனைப்புடன் உள்ளது.
    இந்த ஆய்வின்போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம்.பெ.சுப்பிரமணி, இன்பசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அ.சிவக்குமார்,  நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்.செந்தில்குமார்,  உதவி செயற்பொறியாளர்கள் ஆறுமுகம், கனேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ், சிப்காட் உதவி பொறியாளர் சிந்து, வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: ஈச்சம்பாடி அணைக்கட்டு நிறேற்றும்திட்டம், தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி சிப்காட், தருமபுரி சிப்காட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தருமபுரி சிப்காட்டில் ஓலா நிறுவனம், தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்., தருமபுரி வெண்ணாம்பட்டியில் இரயில்வே மேம்பாலம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Social Vision June 15, 2024 June 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

காணாமல் போனவர் ஒருவர் அல்ல… ஒரு குடும்பத்தின் நம்பிக்கை! ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனவர்களின் தினம்

August 29, 2026
தொல்லியல்

சிந்துவெளிப் பண்பாட்டின் நூற்றாண்டுக் கருத்தரங்கம் –       தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமுஎகச வரவேற்பு

February 20, 2024
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஒகேனக்கல்லில் ஆய்வு 

July 28, 2024
தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024
மாவட்டங்கள்

பாப்பிரெட்பட்டியில் உலக பழங்குடியினர் தினவிழா

August 10, 2026
மாவட்டங்கள்

வத்தல்மலையில் உள்ள 13 கிராமங்களை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க இந்திய பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தல்.

August 9, 2026

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?