பத்ம விபூசண் பத்மபூஸன், பத்மஸ்ரீ விருந்துக்கு விண்ணப்பிக்கலாம்
2025-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் வகையில் சமூகம், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், பொதுத்துறைகள், குடிமையியல் பணிகள் மற்றும் தொழில் துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்திய அரசின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் விபரங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.06.2024 ஆகும்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதியுடையவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்

