மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு
சினிமா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு

Social Vision
Last updated: 2024/06/11 at 6:15 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவை இரு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வரும் நடிகர் விஜய், சமீபத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதோடு, மாணவர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு, விஜய் மீண்டும் மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் அந்த மாணவர்களோடு பெற்றோர் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இணைத்து உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது. அதனால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது, ஜூன் மாதம் 28 ஆம் தேதியும், ஜூலை 3 ஆம் தேதியும் என 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட வாரியாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் கட்டமாக ஜூன் 28 ஆம் தேதி அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இரண்டாம் கட்டமாக ஜூலை 3 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்தப் பாராட்டு விழாவில், விஜய், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
TAGGED: @actor Vijay, @socialvisiontv.in, @தவெக, Social vision tv.in tamilnadu, tvk, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு
Social Vision June 11, 2024 June 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா 

April 27, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 

November 9, 2025
ugc
கல்வி & வேலைவாய்ப்பு

யு.ஜி.சி அறிவுறுத்தல் : மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

March 4, 2024
மாவட்டங்கள்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தொல்.திருமாவளவன் எம்பி 

June 7, 2024
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

November 27, 2024

மேலும் படிங்க

சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?