மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.
தொழில்

தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/11 at 5:16 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம்
நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.
 தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி கிராமம் எர்ரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள கே.ஜே. மாளிகையில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட்  (SIPCOT) நிறுவனம் நிறுவ சுற்றுச்சூழல் அறிவிப்பாணை சட்டப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முன்னிலையில் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்  (11.06.2024) நடைபெற்றது.
    இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  சுற்றுச்சூழல் ஆலோசகர் சென்னையை சேர்ந்த HECS நிறுவனத்தின் அலுவலர்கள் தருமபுரி வட்டம் அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் அமைய உள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்காயில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அவைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத நிலையை உருவாக்க சிப்காட் நிறுவனம் எடுக்க உள்ள நடவடிக்கைகள், கட்டமைப்புகள் ஆகியவை தொடர்பாக விளக்கம் அளித்தார்கள்.
    மேலும் இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டதில் சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தார்கள்.  சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைக் கூடாது, ஏற்கனவே வளர்ந்துள்ள பெரிய மரங்களை பாதுகாக்க வேண்டும், மேலும் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்பட வேண்டும், நீர்நிலைகள் அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும், உருவாக்கப்படும்  தொழிற்சாலைகளில் உள்ளுர்  மக்கள் மற்றும் நிலம் வழங்கிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்டையாமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தார்கள்.
மேலும் முன்னாள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணியன் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவதற்கான அவசியத்தையும், உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் எனவும் சுற்றுச்சுழல் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.
 இக்கூட்டத்தில் தருமபுரி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, தருமபுரி சிப்காட் திட்ட அலுவர் ராஜ்குமார், நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சிந்து, தருமபுரி வட்டாட்சியர்  ஜெயசெல்வன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
TAGGED: Social vision tv.in tamilnadu, சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்டையாமல் இருக்க வேண்டும், சிப்காட் நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கவேண்டும்., சுற்றுச்சூழல் ஆலோசகர் சென்னையை சேர்ந்த HECS நிறுவனத்தின் அலுவலர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் சிப்காட் பூங்கா, தருமபுரி சிப்காட், தருமபுரி சிப்காட் கருத்துகேட்புகூட்டம், தொழிற்பூங்காவை சிப்காட்  (SIPCOT)
Social Vision June 11, 2024 June 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

புத்தகம் பேசினால்

தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

February 18, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.

February 9, 2024
மாவட்டங்கள்

தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு இலவச  உடல் பரிசோதனை கூப்பன் 

May 20, 2024
அரசு நல திட்டம்

அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா

January 30, 2025
ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

February 27, 2024
அரசியல்

தருமபுரி மாவட்ட எஸ்சி, பிரிவு மாவட்ட செயற்குழு கூட்டம். 

August 25, 2025

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவு மழையாக அரூரில் 19.2  மில்லிமீட்டர் மழைபெய்தது.

July 19, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?