மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 
ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

Social Vision
Last updated: 2024/06/10 at 1:47 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு.
தருமபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு நடமாடும் வாகனம் (பொறுப்பாளர்) முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் அவர்கள் இருவரின் வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாடுகளின் படி  தருமபுரி மாவட்டம் முழுவதும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்
உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள், ஆய்வக வாகனத்தின் அம்சங்கள் , உணவுப் பொருள்களில் கலப்படம் நிகழ்விடத்திலேயே கண்டறிதல், கலப்படம் இருப்பின் உரிய உடன்  நடவடிக்கை   மற்றும் உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த  விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடத்தூர் பேருந்து நிலையத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் கண்ணப்பன், பன்னீர்செல்வம்,   ஜெகதீசன், குமார் உள்ளிட்டோர் முன்னிலையில்
மொரப்பூர்  ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன், பகுப்பாய்வு வாகன ஓட்டுனர் ரகுநாதன் உள்ளிட்ட குழுவினர்   உணவு  பாதுகாப்பு நடமாடும் வாகனம்(food safety on wheel) மூலம் உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து வாகனத்தில் உள்ள எல்.இ.டி. தொடுதிரை வாயிலாக காணொளி காட்சிகள் திரையிட்டு (வீடியோ) உணவு பொருட்கள் கலப்படம் கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
மேலும்  தேயிலை, தேன், பால், நெய், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி , உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு கொண்டு நேரடியாக கலப்படம் கண்டறிதல் செயல் விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு செய்தனர். மேலும் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களளான உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, சைவ, அசைவ குறியீடு, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், பொருள் எடை, எண்ணிக்கை, நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிம எண் ஆகியவை இருக்க வேண்டியது குறித்து உணவு பொருள் பாக்கெட்டுகளை கொண்டு நேரடியாக செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பேருந்து நிலைய வளாக கடை விற்பனையாளர்கள், பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் முத்தானூர் ஊராட்சி தலைவர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக விழிப்புணர்வு கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் விஜய்சங்கர், மேற்பார்வையில் , பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் 40க்கும்  மேற்பட்டோர் முன்னிலையில் உணவு உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு, உணவு பொருட்கள் லேபிளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர் ஜெயலட்சுமி, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில், முரளி, விஜி, உள்ளிட்ட   பணியாளர்களும் பங்கேற்றனர்.
கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட  அளவிலான டீத்தூள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் சமையல் எண்ணெய், இனிப்பு கார வகைகள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்களால் பல்வேறு இடங்களில்  மாதிரி சேகரிக்கப்பட்டு, வாகனத்தில் பகுப்புப்பாய்வுக்கு அளிக்கப்பட்டது.  பரிசோதனை முடிவில் உரிய நடவடிக்கை நியமன அலுவலர் உத்தரவுப்படி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
TAGGED: food safty, food safty on wheels, Social vision TV.in Tamilnadu news, உணவு பாதுகாப்பு அலுவலர், உணவுப் பாதுகாப்பு, கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு.
Social Vision June 10, 2024 June 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா 

August 21, 2024
இந்தியா

தெலுங்கானா மாநிலம் உருவான வரலாறு 

June 1, 2024
அரசு நல திட்டம்
தமிழ்நாடு

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.

February 7, 2024
மாவட்டங்கள்

டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.

May 9, 2024
உலகம்

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

February 6, 2026
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 

May 30, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?