குரூப்-4 போட்டி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group IV பதவி களுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி,அரூர், காரிமங்கலம், நல்லம் பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.
மொத்தம் 228 தேர்வு மைய்யங்களில் சுமார் 62,630 தேர்வர்கள் தேர்வு எழதுகின்றனர்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் போட்டித்தேர்வுமையத்தை
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

