மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வங்கி வேலைவாய்ப்பு 9995 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > வேலைவாய்ப்பு > வங்கி வேலைவாய்ப்பு 9995 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
வேலைவாய்ப்பு

வங்கி வேலைவாய்ப்பு 9995 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/06/09 at 1:20 PM
Social Vision
Share
4 Min Read
SHARE
வங்கி வேலைவாய்ப்பு
9995 பணியிடங்கள்
டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 9,995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது அந்த மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்களின் விவரம்
Office Assistant (Multipurpose) – 5585
Officer Scale-I (Assistant Manager) – 3499
Officer Scale-II General Banking Officer (Manager) – 496
Officer Scale-II (Agriculture Officer) – 70
Officer Scale-II (Marketing Officer) – 11
Officer Scale-II (Treasury Manager) – 21
Officer Scale-II (Law) – 30
Officer Scale-II (CA) – 60
Officer Scale-II (IT) – 94
Officer Scale-III (Senior Manager) – 129
கல்வித் தகுதி: 
கிளர்க் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
துணை மேலாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு, அந்தந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 
கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
தேர்வு முறை:
கிளர்க் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மட்டுமே உண்டு. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
துணை மேலாளர் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படி நிலைகளில் தேர்வு முறை இருக்கும்.
பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என தேர்வு செயல்முறை இருக்கும்.
தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு: 
கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து தலா 40 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 45 நிமிடங்கள் மட்டுமே. முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு: 
கிளர்க் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கிளர்க் பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதே நேரம் துணை மேலாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்ற பின், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
பிற அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வுக்கு பின்னர், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். பின்னர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 27 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஆன்லைனில் https://www.ibps.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு ரூ.175 ஆக உள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
TAGGED: @socialvisiontv, https://www.ibps.in/, Social vision TV, Social vision tv.in tamilnadu, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB), வங்கி வேலைவாய்ப்பு 9995 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Social Vision June 9, 2024 June 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
மாவட்டங்கள்

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

March 8, 2024
உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை.
ஆரோக்கியம்

தருமபுரி : பாலக்கோடு பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.

February 5, 2024
வன்னி அரசு
அரசியல்

தீவட்டிப்பட்டி ஜாதி கலவரம் : கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

May 9, 2024
மாவட்டங்கள்

இலக்கியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2560 மனு பொதுமக்கள் அளித்தனர்: மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு ஆட்சியர் தகவல் 

July 15, 2024
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025
தமிழ்நாடு

இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது: தொல்.திருமாவளவன் எம்பி

March 4, 2025

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024

43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

August 3, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?