தருமபுரி குரூப்-4 போட்டி தேர்வுக்கு 11427 பேர் ஆப்சென்ட்
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-Group IV பதவி களுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி,அரூர், காரிமங்கலம், நல்லம் பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெற்றது.
மொத்தம் 228 தேர்வு மைய்யங்களில் சுமார் 62,630 தேர்வர்கள் தேர்வு எழுத இருந்தனர்.இதில் தேர்வு எழுத வந்தவர்கள் 51203 பேர், 11427 பேர் தேர்வு எழுதவரவில்லை. 81.7 சதவீதம் பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது

