தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு
தொப்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, புள்ளிமான் வாகனத்தில் அடிபட்ட நிலையில், சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் நேற்று காலை, 8:30 மணிக்கு சேலம் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் வனத்தில் இருந்து, 3 வயதுடைய ஆண் புள்ளிமான் சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தது. இது குறித்து, தகவல் அறிந்த பாளையம் சுங்கசாவடி சாலை பராமரிப்பு குழுவினர் அடிபட்ட புள்ளிமானை மீட்டு, பாளையம்புதூர் அரசு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் ஞானசேகர் மானுக்கு சிகிச்சை அளித்த பின், வனப்பகுதியில் விடுவதற்காக, வனத்துறையினர் கொண்டு செல்லும் வழியில் மான் இறந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

