நலிவடைந்த குருசாமிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐயப்பா முன்னணி சேவா சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நலிவடைந்த குருசாமிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கவேண்டும்.பசரிமலை செல்பவர்களுக்கு பயனநிதி வழங்கவேண்டும்.ஐய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அரிசி வழங்கவேண்டும்.ஐய்யப்ப பக்தர்களின் சரணாலயம் அமைக்க தேனி,கம்பம் போன்ற இடங்களில் 15 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ரஜினி சிவா தலைமை வகித்தார். நிர்வாகி பாரதி வரவேற்றார்.மாநில அமைப்பாளர் வேதாத்திரி ராமரிஷி சிறப்புரையாற்றினார்.

