மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 
இந்தியா

இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 

Social Vision
Last updated: 2024/06/05 at 2:32 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் குறைந்த வயதுடைய எம்.பி.க்கள் பலர் வெற்றி  பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் சஞ்சனா ஜாதவ். ராஜஸ்தானின் பரத்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சனா ஜாதவின் வயது 25. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.
சஞ்சனா ஜாதவ் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
25 வயதான சஞ்சனா ஜாதவ், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். 18 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.
மகாராஜா சூரஜ்மல் பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை கடந்த 2019ஆம் ஆண்டில் முடித்தார்.சஞ்சனா ஜாதவின் கணவர் ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் ஆக உள்ளார். அவரது பெயர் கப்டன் சிங். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
தேர்தல் ஆணையத்தில் சஞ்சனா ஜாதவ் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.23 லட்சம். அவருக்கு ரூ.7 லட்சம் கடன் உள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், சஞ்சனா ஜாதவ் பாஜகவின் ரமேஷ் கேடியிடம் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்
ஆனால், அந்த தோல்வியை துவண்டு போகாமல் மக்களவைத் தேர்தலின்போது தீவிரமாக பிரசாரம் செய்தார். இதன் மூலம், வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்த்ததுடன், இளம் எம்.பி.யாக மக்களவைக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
TAGGED: @Congress, @socialvisiontv, @socialvisiontv.in, 2024 Election commission, 2024 India parliament election, Social vision tv.in tamilnadu, இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள், காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள், ராஜஸ்தானின் பரத்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம்பெண் வெற்றி
Social Vision June 5, 2024 June 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

February 23, 2024
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 14 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
அரசியல்

காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 

December 6, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி

March 1, 2024
மதிமுக
அரசியல்

திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக போட்டி

March 18, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் 13 மில்லிமீட்டர் மழைபெய்தது.

June 14, 2024

மேலும் படிங்க

இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?