இரும்பு ரேக் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரம்பட்டியை அடுத்த சிறுபிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (43) சொட்டுநீர் பாசன முகவர் இவரது மகன் தியானேஷ் (8) வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காற்று அடித்ததில் இரும்பு ரேக் சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த தியானேஷ் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிழந்தான். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

