மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 

Social Vision
Last updated: 2024/05/30 at 7:38 AM
Social Vision
Share
3 Min Read
SHARE
ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை -தடுக்க அரசு நடவடிக்கை தேவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 
தொடர்கதையாகும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் :15  நாட்களில் 5 பேர் தற்கொலை –  தமிழக அரசு இனியாவது விழித்து மக்களைக் காக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்!என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர்  மாவட்ட சுவாமிமலையில்  உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த  மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர்  ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால்  ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் ரம்மி என்பது ஆக்டபசின்  கரங்களைப் போல, அதை விளையாடத் தொடங்குபவர்களை சுற்றி வளைக்கக் கூடியது என்பதற்கு தினசீலனின்  செயல்கள் தான் எடுத்துக்காட்டு ஆகும்.  மயிலாடுதுறையில்  நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மியில்  தினசீலன் இழந்துள்ளார். பணத்தைக் கடனாகக் கொடுத்தவர்கள், அந்த பணத்தை திரும்பக் கேட்டதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து  தினசீலனின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானம் பேசி தினசீலனை மீட்டுள்ளனர். அதன்பின்னர்  அவரை சில மாதங்களுக்கு முன் சுவாமிமலையில் தங்கும் விடுதியில் பணியில் சேர்த்துள்ளனர்.  ஆனால், அங்கும் விடுதியின் வருமானத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துள்ளார். அதன் பிறகு மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக  நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி  விட்டன. கடந்த மே 14-ஆம் தேதி  முதல்  மே 29 வரையிலான  15  நாட்களில்  5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால்  ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத்  தடுக்க முடியாது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6  மாதங்களில் மொத்தம் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.   அவர்களில்  பாதி பேர், அதாவது  6 பேர்  கடந்த மாதம் 29-ஆம் தேதிக்கும்,   மே  மாதம் 29-ஆம் தேதிக்கும்  இடைப்பட்ட  ஒரு மாதத்தில்  தற்கொலை செய்து  கொண்டுள்ளனர்  என்பதிலிருந்தே  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு  வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் சூதாட்ட  தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த  நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  ஒவ்வொரு தற்கொலையின் போதும்  ஆன்லைன் சூதாட்டத்தைத்  தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன்  சூதாட்டத்திற்கு  உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும். அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். என தனது எக்ஸ் பக்கத்தில் மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்க்கு தடைவிதிக்க வேண்டும்., ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல், ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்பு
Social Vision May 30, 2024 May 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026
புத்தகம் பேசினால்

தமிழர் பண்பாடும் தத்துவமும் : நா.வானமாமலை

April 27, 2024
தருமபுரி திமுக
மாவட்டங்கள்

மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.

March 6, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்

June 17, 2025
தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா

March 3, 2024
TTVDhinakaran
அரசியல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – டி. டி. வி தினகரன்

February 16, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?