தருமபுரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் 4 ஜி சேவை தொடங்கப்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கோடுப்பட்டி, சிகரளஹள்ளி மற்றும் அரூர் வட்டம் வள்ளமதுரை ஆகிய இடங்களில் 4ஜி சேவைதொடங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொலைதொடர் இல்லாத 20 கிராமங்கள் கண்டறியப்பட்டு, அதில் 16 இடங்களில் தொலை தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் வட்டம் கோடுப்பட்டி யில் நடைபெற்ற 4 ஜி சேவை துவக்கவிழாவில் தருமபுரி மாவட்ட பொதுமேலாளர் டாக்டர் சிபி.சுபா துவக்கிவைத்தார்.இந்நிகழச்சியி ல் உதவிபொதுமேலாளர்கள் சரவணன் ,அஜாரே, ஐடிஎஸ்,தலைமை பொதுமேலாளர் தமிழ்மணி மாவட்டதுணை பொதுமேலாளர் பிரபுதுரை,ஆகியோர் பங்கேற்று பேசினார்.

