மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 
குற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 

Social Vision
Last updated: 2024/05/29 at 6:00 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 
தருமபுரி, சேலம், ஆத்தூர், அரூர் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள நகை கடைகளில் கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை தொடங்கி  100 கோடிக்கு மேல் மோசடி செய்த சபரி சங்கரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாண்டிச்சேரியில் வைத்து நேற்று கைது செய்து இன்று தருமபுரி அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
எஸ் வி எஸ் நகைக்கடை என்ற பெயரில் சேலம், தருமபுரி, அரூர், ஆத்தூர், நாமக்கல், கோவை, திருச்சி, கரூர், உள்ளிட்ட 11 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையின் உரிமையாளர் நடத்திய மோசடியால் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சேலம் மாநகர ஆணையர் விசாரணை மேற்கொண்டார் .விசாரணையில் சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சபரி சங்கர் சேலம் அடுத்த சீல்நாயக்கன்பட்டி அம்மாபேட்டை ஆத்தூர் தருமபுரி அரூர் உள்ளிட்ட11இடங்களில்நகைக்கடைகளை நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
நகைக்கடை மூலம் மாத சீட்டு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை  வழங்கும் திட்டம், என கவர்ச்சிகரமான பல திட்டங்களைசபரிசங்கர்அறிவித்துள்ளார்.  இதை நம்பிய ஏராளமானோர் நகை திட்டத்தில் சேர்ந்து பல லட்சம் ரூபாய் சேமிப்பு பணத்தை செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அனைத்து கடைகளையும் திடீரென மூடி விட்டு ரூபாய் 100 கோடி மதிப்பிலான நகை பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனால் தீபாவளி நேரத்தில் சீட்டு போட்டவர்கள் நகை எடுக்க வந்தவர்கள் நகை கடைகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சபரி சங்கர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து பணம் மற்றும் நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி  அளித்ததாக கூறப்படுகிறது.
அதன் பெயரில் நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர் மேலாளர்கள் கவின், அஜித், ஆகியோர் மீது மோசடி உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எஸ் வி எஸ் நிறுவனத்தில் நகை பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த ஏராளமானோர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். மனுக்கள் அதிகளவில் குவிந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  காவல் ஆய்வாளர் கற்பகம் காவல் உதவி ஆய்வாளர் சிவஞான சம்பந்தம், தலைமை காவலர் முனிகிருஷ்ணன் தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைமறைவான  சபரி சங்கரை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து நேற்று பாண்டிச்சேரி ரெயின்போ நகர் நாலாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு தனி வீட்டில் வைத்து போலீசார் சபரிசங்கரை கைது செய்தனர். பாண்டிச்சேரியில் தனி வீடு வாடகை எடுத்து அங்கு தங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் சபரி சங்கரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தருமபுரி காவல் நிலையம் நேற்று இரவு அழைத்து வந்தனர். இன்று தருமபுரி நகரில் உள்ள நகைக்கடையை திறந்து சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றினர். தருமபுரியில் யார் யார் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டனர் என தீவிர விசாரணை  மேற்கொண்டனர். இதனை அடுத்து இன்று மாலை சபரி சங்கர் நீதிமன்ற காவலுக்கு  அனுப்பி வைத்தனர்.மேலும் சபரி சங்கர், நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்த பின்னரே மோசடி குறித்து தெரியவரும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision TV, Social vision tv.in tamilnadu, தங்க நகை பறிமுதல், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி, நகை சீட்டு மோசடி பொருளாதார குற்றப்பிரிவில் கீழ் வழக்கு பதிவு, நகை சேமிப்பு சீட்டு நடத்தி ரூ 100 கோடி மோசடி செய்தவர் கைது, மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
Social Vision May 29, 2024 May 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.

June 6, 2024
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட் 'டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? 'நீட்' என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ! ஜூன் 15 ஆம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம்! கி. வீரமணி அழைப்பு

June 10, 2024
மேகதாது ராமதாஸ்
அரசியல்

மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும்!

February 16, 2024
மேதின விழா
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

April 29, 2024
அரசு நல திட்டம்

காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 

November 8, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

June 8, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?