மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/05/24 at 2:30 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.
தருமபுரி மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் அண்மையில் வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டுச் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தலைமையில்  நடைபெற்றது.பின்னர் அவர்  தெரிவித்ததாவது:
    இந்த நிகழ்ச்சியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்த 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 42 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3 அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளை பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக தேர்வுப் பணிகளில் ஈடுபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
      10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற பாடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதார பாராட்டுகிறேன்.  இதேபோல் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் 100 சதவீத தேர்ச்சிபெற முழு முனைப்போடு பாடுபட வேண்டும்.
    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் சார்ந்த தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குவதோடு, மதிப்புக் கல்வியையும் வழங்க வேண்டும். மேலும், பொது அறிவை வளர்க்கும் விதத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.  தலைமை ஆசிரியர்கள் மாதந்தோறும் செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு மாணவர்களின் கல்வி தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் உயர்த் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    வரும் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தை  சேர்ந்த 200 அரசுப் பள்ளிகளுக்கு மேல் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
    தருமபுரி மாவட்டத்தில எந்தவித தொழில் வளர்ச்சியும் இல்லாமல், விவசாயத்திலும் இற்கையின் ஒத்துழைப்பை நம்பியே உள்ள நிலை, கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் பெற்றோர்கள். இந்நிலையில் மாணவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல் பள்ளிகளில் சிறந்த கல்வியை பெற்று உயர்கல்வியில் சேர்ந்து, அதற்குபின் நல்ல ஒரு பணிக்கு செல்வதுதான்.  இத்தகைய சுழலில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க வேண்டும்.  எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் சிறந்த பணியில் உள்ள ஆசிரியர்கள் கல்வியுடன் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், கட்டுபாடு உள்ளிட்ட நற்பண்புகளை கற்றுத்தர வேண்டும். என மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தெரிவித்தார்.
    இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா,  மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வீ.விஜயகுமார், தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி, தருமபுரி) முனைவர்.இ.மான்விழி,  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி, அரூர்) அ.இஸ்மாயில், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மா.ரேணுகோபால் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா, Social vision tv.in tamilnadu, அரசு உண்டு உறைவிடப் பள்ளி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு வாழ், அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்., ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, சமூகநலத்துறை பள்ளி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
Social Vision May 24, 2024 May 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி காவல்துறை குறைதீர்க்கும் கூட்டத்தில் 87 மனுக்களுக்கு தீர்வு

June 26, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

February 2, 2025
தமிழ்நாடு

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச்-29 ல் பிரச்சாரம் துவக்கம் 

March 25, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

August 16, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

July 6, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஜூலை -15 முதல் ஆகஸ்ட் 15 வரை முகாம் 

July 7, 2025

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?