நெல்லை வனப்பகுதியில் சீறிப்பாய்ந்த சிறுத்தை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. கால்நடைகளை தொடர்ந்து சிறுத்தை வேட்டையாடி வந்ததாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர். கிராம மக்கள் புகாரை அடுத்து வேம்பையாபுரம் கிராமத்தில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நள்ளிரவில் சுற்றித் திரிந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.இதனையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

அம்பையில் சீறிப்பாய்ந்த சிறுத்தை சுதந்திரத்தின் பாய்ச்சல் என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு பெருமிதம் கொண்டதாகவும் அம்பை வனத்துறை குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

