பதக்கம் வென்ற தருமபுரி அரசு கல்லூரி மாணவருக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு
அகில இந்திய மற்றும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கைப்பந்து போட்டிகளில் பதக்கம் வென்ற தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர் எஸ்.சஞ்சய்-க்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2023 -2024ம் கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் கைப்பந்து போட்டிகள் அண்மையில் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி ராசிபுரத்தில் நடைபெற்றது.அதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆடவர் கைப்பந்து அணி பங்கேற்று நான்காம் இடத்தை பெற்றது.
அகில இந்திய மற்றும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கைப்பந்து போட்டிகள் கேரள மாநிலம் கோட்டயம் – மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அப்போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி இளம் அறிவியல் கணிதத்துறை மூன்றாம் ஆண்டுமாணவன் எஸ்.சஞ்சய் ,சேலம் பெரியார்பல்கலைக்கழக கைப்பந்துஅணிக்காகதேர்வுசெய்யப்பட்டு, தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடமும் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி இரண்டாம் இடமும் பெற்று பல்கலைக்கழகத்திற்கும்,தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார். பதக்கம் வென்ற மாணவன் எஸ்.சஞ்சய்-க்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் அவர்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட. பதக்கம், கோப்பை,மற்றும் தகுதிச்சான்றிதழை வழங்கி வாழ்த்தினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் கே.வெங்கடாசலம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் பேராசிரியர்கள் முனைவர் ஜி.பிரபாகரன்,முனைவர்தேசிங்குமுனைவர் சிவப்பிரகாசம்,முனைவர் வீ.தீ. குமார் ,முனைவர் சதீஷ்குமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.

