தருமபுரி சத்துணவு ஊழியர் சங்க 40 ம் ஆண்டு மாணிக்கவிழா
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், 40 ம், ஆண்டு மாணிக்கவிழா, தருமபுரி மாவட்டத்தில், அச்சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு, ஒன்றிய தலைவர் எம்.ஜெயந்தி தலைமை வகித்தார்.மாவட்ட துணை தலைவர் எம்.ராமன் சங்க கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஜாக்டோ ஜியோ மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி,சிறப்புரையாற்றினார். மாவட்டதுணைத்தலைவர்வளர்மதி,தேவி ,ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகள் ஏ.பெருமாள் எம்.கோவிந்தன், ஆர்.ராமன், கே.கணேசன், பி.சுப்பிரணி,ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில், வட்ட தலைவர் ஆர்.துரை சங்க கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பழணியம்மாள் , துணைத் தலைவர் சுமதி, இணை செயலாளர் சக்தி, முன்னாள் மாவட்ட தலைவர் சி காவேரி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

காரிமங்கலத்தில் ஒன்றிய தலைவர் வெங்கட்ராமன்தலைமைவகித்தார்.மாவட்ட தலைவர் தேவகிசங்ககொடியேற்றி வைத்துசிறப்புரையாற்றினார்.ஒன்றியசெயலாளர் சித்ரா பேசினார்.

கடத்தூரில் நடைபெற்ற விழாவில் ஒன்றியதலைவர்ரோஜாசங்ககொடியேற்றிவைத்தார்.ஒன்றிய செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவுஊழியர்கள்பணியாற்றிவருகின்றனர்.இவர்களுக்கு,காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.காலிபணியிடங்களைநிரப்பவேண்டும்.ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

