தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் : இரட்டை இயேசு சிறுகதைகள்
அறிவியல், போர், பெருந்தொற்று, அதிகாரம் ஆகியவற்றால் உலகளாவிய மனிதச் சமூகம் சந்திக்க நேரும் பாதிப்புகளில் இக்கதைகள் மையம் கொள்வதால் இவை தமிழில் எழுதப்பட்ட
உலகக் கதைகள் என்று அடையாளப்படுத்தலாம். விஜய ராவணனின் இக்கதைகள் யாவும் அந்நிய நிலத்தில் நிகழ்பவை. இவை முன்வைக்கும் கதைக்களங்களும் அதிகமும் நமக்குப்
பரிச்சயமில்லாதவை. ஆனால், தன் நேர்த்தியான சித்தரிப்பின் மூலமாக இவற்றை நமக்கு நெருக்கமான கதைகளாக அவரால் மாற்றிவிட முடிந்திருக்கிறது.
நூல்: இரட்டை இயேசு
வகைமை: சிறுகதைகள்
ஆசிரியர்: விஜய ராவணன்
வெளியீடு: எதிர்
விலை: ₹250
நூலைப் பெற; 9790443979
