சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் மாரியம்மன் கோவில் வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க முயன்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்களையும், காவல் துறையின் காட்டுமிராண்டித் தனத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் : ஏப் 08
கடந்த 03 ஆம் தேதி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் மாரியம்மன் கோவில் வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க முயன்ற மக்கள் மீது அதே ஊரை சேர்ந்த வன்னியர் சமூக மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில் 18 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு மண்டை, கை, கால் உடைந்து மருத்துவமனையில் உள்ளனர். 5 கடைககளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு ஆதிக்க ஜாதிவெறியர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர் அவர்களோடு இணைந்து காவல்துறையும் மக்களை தாக்கி 13 பேருக்கு மேல் படித்த இளைஞர்களை கைது செய்திருக்கிறது. பெண்கள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியுள்ளது மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தாக்குதலை நடத்தியுள்ளனர். எதிர்தரப்பில் இருந்து யார்மீதும் வழக்கு தொடரப்படவில்லை என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் கண்டன உரை நிகழ்தினார். துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் மா. தமிழ்ச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி, இ. கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தோழர் மோகன், மண்டல செயலாளர் தமிழ் அன்வர்
சேலம் மாநகர் மா. செயலாளர் இ. காஜாமைதீன், இரா.கிட்டு, இரா. நாவரசன், சௌ. பாவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றனர்.
வன்னி அரசு அவர்கள் பேசுகையில் ;

தீவட்டிப்பட்டி ஆதிதிராவிடர் மக்கள் மீது நடந்த தாக்குதல் திட்டமிட்ட வன்முறை தாக்குதல். உடன் இணைந்து பொதுமக்கள் மீது காவல்துறையும் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் ஆதிதிராவிட மக்களை 13 நபர்களை கைது செய்து சிறைப்படுத்தியுள்ளது காவல்துறை. தாக்குதல் நடந்த பிறகும் இன்றைக்கும் கூட இரவு இரண்டு மணிக்கு கதவைத் தட்டி விசாரணை என்ற பெயரில் பெண்களை தொந்தரவு செய்கின்றனர்.

காவல்துறை பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பெண்களை மார்பிலும், கால் தொடை பகுதியில் கடுமையாக தாக்கியுள்ள காவல் துறையின் ரவுடித்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் கண்டிக்கிறோம் என பதிவு செய்தார். மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்து அறநிலைத்துறைக்குள்ளாக இருக்கும் ஒரு கோயிலில் அனைத்து சாதியினர் இரட்சகர் என்கின்ற சட்டம் இருக்கக் கூடிய இந்த சூழலில் தமிழர்கள் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலைத்துறைக்குட்பட்ட கோயில்களிலேயே இது போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ளது.

இது தமிழ்நாடு அரசுக்கு விடப்பட்ட சவாலாக ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்றும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆதி திராவிட மக்களை அடித்து காயப்படுத்தி உள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டிய தாழ்த்தப்பட்ட மக்களை காவல்துறையை அடுத்து தாக்குதல் நடத்தி இருப்பதும், எஸ் பி அருண் கபிலன் அம்மா மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் விடுதலை சிறுத்தைகள் மக்களோடு மக்களாக நிற்கும் இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பிற்படுத்தப்பட்டால் மக்களின் மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டுக்காக நாடாளுமன்றத்தில் போராடியவர்கள் விடுதலை சிறுத்தைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதை நினைவுபடுத்திக் கூறினார். ஓ பி சி எம் பி சி மக்களின் உயர்கல்விக்கான உதவித்தொகையை மோடி அரசு நிறுத்திய போது அவர்களுக்கான உதவித் தொகையை கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் குறிப்பிட்டார். பிஜேபி சங்கப் பரிவார் கூட்டங்களுடன் சேர்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கும் ஜாதி கட்சிகள் இத்தகைய தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்றும், ஆதி திராவிட மக்கள் இந்துக்கள் இல்லையா ? என்கின்ற கேள்வியும் எழுப்பினர். இன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பாதுகாக்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் விளங்குகிறது என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பொய்யாக பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும், கைது செய்து சிறை படுத்தியுள்ள ஆதி திராவிட மக்களை விடுவிக்க வேண்டும் என்றும், ஜாதியவாதிகளை கைது செய்ய வேண்டும் என்றும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி அருண் கபிலன் அவர்களை விசாரணைக்உட்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விட்டுத்தார்.
துரை. ரவிக்குமார் அவர்கள் பேசுகையில் ;

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியாளும் திராவிட மாநகராட்சியின் நான்காம் ஆண்டு தொடக்கத்தில் இது போன்ற கலவரங்கள் நடந்திருப்பது என்பது தமிழ்நாடு அரசுக்கு விடப்பட்ட சவால் என்று குறிப்பிட்டார். பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு இதுபோன்ற சம்பவங்கள் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுவது என்றும் தெரிவித்தார். 1927 ஆம் ஆண்டு நீதி கட்சி ஆட்சியின்போது கோயில் நுழைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு கோயில் நுழை உரிமைக்காக தந்தை பெரியார் அவர்கள் குரல் கொடுத்தார். மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றினார். சமூக நீதியின் மீது அக்கறை கொண்ட சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகியவை கோயில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டு கைதும் ஆகி இருக்கிறார்கள். அன்றைக்கு நீதி கட்சி தான் இந்து அறநிலை சமயத்துறை உருவாகுவதற்கு காரணமாக இருந்தது என்பதை குறிப்பிட்டு அந்த வழித்தோன்றலில் வந்த திராவிட மாடல் அரசு இருக்கக்கூடிய இந்த சூழலில், முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகருக்கான உரிமையை நிறைவேற்றிய பிறகும் கூட, தமிழ்நாடு இந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவிலில் ஆதி திராவிட மக்கள் செல்ல முடியவில்லை தடுக்கப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள் என்பது தமிழ்நாடு அரசுக்கு விடப்பட்ட சவால் என்பதை புரிந்து கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இதுபோன்ற சம்பவங்களின் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகளுக்குள் சென்று காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

மேலும் சேலம் மாநகர மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு துறை நிர்வாகம் ஜாதியை ஒடுத்து முறைக்கு துணை போகிறதா அல்லது செயலற்று நிற்கிறதா என்கின்ற கேள்வியும் எழுப்பினார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இது போன்ற சாதி கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது மட்டுமே வழக்கு பதிவதும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் இருப்பதும் எத்தகைய பாசம் என்று கேள்வி எழுப்பினார்.
பொய் வழக்கு போட்டு கைது செய்த ஆதிதிராவிட மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு கோயில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் உரையாற்றினார்.

