ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும்,
படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஒசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.ரவிச்சந்திரன் அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

