தென்னிந்தியாவில் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கேரளம், தமிழகம் என வசூலை அள்ளியது.
உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய இப்படம், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரூ.15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படம் வருகிற மே 5 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

