மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 
அரசியல்

பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 

Social Vision
Last updated: 2024/04/10 at 11:48 AM
Social Vision
Share
6 Min Read
SHARE

பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை
ஜி.ராமகிருஷணன் பேட்டி 

 

இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அ.மணியை ஆதரித்து, பென்னாகரத்தில் நடைபெறும் பொதுககூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் தருமபுரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி

கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 ல் 38 திமுக கூட்டணி வெற்றிபெற்றது.2024 ம் ஆண்டு 18 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி சில இடங்களுக்கு சென்றுள்ளார்.தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு 7 ஆவதுமுறையாக மோடி வந்துள்ளார்.சென்னையை சுற்றி 4 மாவட்டங்களும் தூத்துக்குடியை சுற்றி 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் கடிமையாக பாதிக்கப்பட்டனர்.கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டனர்.வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ 37 ஆயிரம் கோடி கேட்டனர்.கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிடுவது வழக்கம், ஆனால் பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
அதேபோல் மனிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் கலவரத்தால் தாக்கப்பட்டனர்.200 கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது அந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லவில்லை.ஆனால் தேர்தலுக்காக தமிழ்நாடு வருகிறார்.நேற்றைய முன்தினம் பிரதர் மோடி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஊழலை மறைக்கவே பிரச்சாரம் செய்வதாக பேசியுள்ளார்.உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி பாஜக என அவர்களே சொல்கிறார்கள் .இது உண்மையா என்று தெரியாது ஆனால் உன்மையிலேயே உலகத்திலேயே ஊழல்மகா கட்சி பாஜக தான், ஊழலையே சட்டபடியான ஊழலை செய்தது பாஜக. 2017 ல் தேர்தல் நிதி பத்திரம் பாஜக உருவாக்கிய போது, 5 சட்டங்களை திருத்தினர்.வருமானவரி சட்டம், தேர்தல் நடத்தும் சட்டம்,வெளிநாட்டு நிதிபராமரிப்பு சட்டம் ஆகியவற்றை திருத்தினர்.ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சட்டத்தை திருத்தினார்கள் இந்த சட்டம் வெள்ளையர் ஆண்ட காலத்தில் 1934 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்த 5 சட்டத்தை திருத்தி தகவல் பெறும் உரிமைச் சட்டம் செல்லாக்காசு ஆக்கிவிட்டனர்.இப்படிதான் தேர்தல் பத்திர நிதி திட்டத்தை உருவாக்கினர்.இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது அப்போது இந்த திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஊழலுக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியிருக்கிறது.தேர்தல் பத்திர நிதி மூலம் முதலாளிகள் நிதி கொடுத்துவிட்டு சலுகை வாங்குவார்கள் இல்லை சலுகை வாங்கிவிட்டு தேர்தல் நிதி கொடுப்பார்கள். இதனால் இந்த திட்டத்தை கடந்த பிப்ரவரி 15 அன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.அதுமட்டுமல்லாமல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மார்ச் 16 க்குள் இந்த விபரங்களை வெளியிடவேண்டும் என்று தீர்ப்பு சொல்லியது.பாஜக கொடுத்த அழுத்தத்தினால் வங்கி தவிர்த்துவிடலாம் என்று நினைத்தது.மீண்டும் உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தினால் தேர்தல் பத்திர நிதி குறித்த விபரம் வெளியிடப்பட்டது.அந்த விபரத்தின் அடிப்படையில் மிகப்பெரிய ஊழல்கட்சியாக பாஜக அம்பலப்பட்டுள்ளது.தேர்தல் பத்திர நிதி உருவாக்கியது மட்டும் அல்லாமல் தேர்தல் நிதி பெறுவதற்கு 3 அடியாட்கள் உருவாக்கினார்கள் வருமானவரித்துறை, ,மத்திய புலனாய்வு துறை,அமலாக்கத்துறை ,நிதிகொடுக்கவில்லை என்றால் அந்த கம்பெனி மீது அமலாக்கத்துறை ரைடு பிறகு அந்த நிறுவனம் நிதி வழங்கிவிடும் இப்படி மிரட்டியே தேர்தல் பத்திர நிதி பெற்றனர்.குறிப்பாக 38 கம்பெனிகள் 179 கன்ட்டிராக்ட் பெற்று ரூ 3 இலட்சத்து 80 ஆயிரம் கோடி பொருமான காண்டிராக்ட் பெற்றுள்ளனர்.தேர்தல்நிதி பத்திரத்தில் ரூ 16492 கோடி நிதி பெரும் முதலாளிகள் கொடுத்துள்ளனர்.இதில் 8252 கோடி பாஜகவுக்கு தேர்தல் நிதி பத்திரமாக பெற்றுள்ளது.தேர்தல்நிதி பத்திரம் பெறுவதற்காகவே பாஜக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சட்டம் 31 ஐதிருத்தம் செய்கின்றனர்.ரூ 20 ஆயிரத்திற்க்கும் மேல் காசோலை மூலம் அரசியல் கட்சிக்கு நிதி கொடுத்தால் தேர்தல் ஆணையத்தின் கணக்கிற்க்கு வரும். இதையும் திருத்தி விட்டனர்.தேர்தல் நிதி பத்திரத்தின் மூலம் ஒரு முதலாளி எவ்வளவு நிதி கொடுத்தாலும் தலைமை தேர்தல் அலுவலருக்கு இந்த விபரத்தை தரவேண்டாம் என திருத்தம் செய்துவிட்டனர்.இதானல் தேர்தல் நிதி பத்திரம் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியாது. ஒரு மூடுமந்திரமாக இருக்கும். கம்பெனி சட்டத்தில் ஒரு கம்பெனி துவங்கி 3 ஆண்டுக்குள் நிதி கொடுக்கக்கூடாது என கூறுகிறது.இரண்டாவது அந்த கம்பெனிக்கு கிடைக்க கூடிய லாபத்தில் 7.5 சதவீதம் நிதி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இல்லம் இல்லை என்றால் கொடுக்க முடியாது, என கம்பெனி சட்டம் சொல்கிறது.இந்த சட்டத்தையே எடுத்துவிட்டனர். 1 இலட்சம் மூலதனத்தில் துவங்கிய ஒரு கம்பெனி 50 கோடி நிதியாக கொடுக்கின்றனர்.இப்படி ஊழல் செய்த பிரதமர் மோடிதான் மற்ற தலைவர்களை பார்த்து ஊழல் செய்வதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்.இந்த ஊழல் அம்பலமானதால் பதட்டத்தில் டில்லி முதல்வர் கெஜிரிவால் சிபுசோரன் ஆகியோரை கைது செய்கின்றனர்.இதற்கு மேலாக காங்கிரஸ் கட்சியின் 11 வங்கி கணக்குகளை முடக்கி விட்டனர்.முதல்வர்கள் கைது செய்வதற்கான ஆதாரங்கள் நிருப்பிக்கவில்லை கேஜ்ரிவால் முழுவிசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்.எனறு கூறிய அவர் நீதிமன்றத்தில் ஒரு விஷியத்தை கூறினார். ஒரு பர்மா கப்பெணி நிறுவனரை கைதுசெய்தனர்.அவர் பாஜகவுக்கு நிதி கொடுத்தார் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை என்று சொன்னார்கள் 10 வருடத்தில் 20 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்கவேண்டும் வழங்கவில்லை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று சொன்னார்கள் இதையும் செய்யவில்லை. மாறாக விவசாய சட்டதிருத்தம் கொண்டுவந்தனர்.இதனை விவசாயிகள் போராடி முறியடித்தனர்.2014 ல் ஜிடிபி குறியூடு 25 சதம். ஜிடிபி என்பது தொழில், விவசாயம், சேவைதுறை, ஒட்டுமொத்த மதிப்பீட்டில் தற்போது 40 சதவீதம் குடும்பகடன் உள்ளது இதில் தனிநபர் கடன் வாங்குவது 2014 ல் 23 சதவீதமாக இருந்தது இன்று 40 சதவீதம் அதிகரிப்பு என்று சொன்னால் குடும்ப வருமானம் குறைந்துள்ளது.உலகத்திலேயே பொருளாதார ஏற்றதாழ்வுகளில் நெம்பர் 1 ஆக இருப்பது இந்தியா. இப்படிபட்ட சூழலில்தான் பாஜக ஆட்சிக்கு வர கூடாது என்று பிரச்சாரம் செய்கிறோம்.இன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தென்னிந்திய மட்டும் அல்லாமல் வடமாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது.தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுக பாஜக அணி தனித்தனியாக உள்ளது.அதிமுக பாஜகவை எதிர்க்கிறோம் என்றுசொல்கிறது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பெற்ற நாளில் இருந்து பாஜகவின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்து குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டம் காஷ்மீர் 370 சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றை மக்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இருந்தது மாநிலங்களவையில் அதிமுக பாமகவும் ஆதரித்து வாக்களித்ததால் மசோதா வெற்றிபெற்றது மதரீதியில் பிளவு ஏற்படுத்தும் மசோதாவுக்கு அதிமுகவும் பாமகவும் வாக்களித்தது‌.இவர்கள் இருவரும் ஆதரிக்கவில்லை என்றால் சட்டமே வந்திருக்காது .முழுக்க முழுக்க பாஜகவை ஆதரித்து விட்டு அதிமுக தற்போது எதிர்ப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.10 ஆண்டுகாலம் மக்களுக்கு எதையும் செய்யாத பாஜக அணி வெற்றிபெற முடியாது 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். இரண்டாம் இடத்தை பிடிக்கத் தான் அதிமுகவும் பாஜகவும் போராடி வருகிறது.

இதையும் படிங்க

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  தீவிரவெற்றி பெற செய்ய வேண்டும் மஜக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.
மநீம தலைவர் கமல்ஹாசன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பு 
தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினால் மாவட்டம் வளர்ச்சி பெரும்: செளமியாஅன்புமணி 

இந்தியாவில் இட ஒதுக்கீடு 50 சதவீதம் பிசிக்கும் 19 சதவீதம் பட்டியல் இன மக்களுக்கும் மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது.எம்பிசிக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு திமுக தலைவர் கருணாநிதி கொண்டுவந்தார்.1952 ல் பிசிக்கு இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் உறுதிசெய்து அப்போது பாமக கட்சி ஆரம்பிக்கவில்லை .
அதிமுக பாஜக உடன் தொடர்ந்து தேர்தல் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஒருவழியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தனர்.உச்சநீதிமன்றமே தேர்தல் நிதி பத்திரம் ஊழல் செய்துள்ளதாக கூறியுள்ளது.நீதியமனறம் ஊழல்வாதி என மோடியை குறிப்பிட்ட பிறகும் பாமக நிறுவனர் ராமதாஸ் மோடியை நல்லவர் என்கிறார்.இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஏ.குமார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து ,எஸ்.கிரைஸாமேரி ,மூத்த தலைவர் பி.இளமபரிதி ஆகியோர் உள்ளனர்.

TAGGED: 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல், Social vision TV.in Tamilnadu news, இந்திய கூட்டணி, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டம், தேர்தல் பத்திர நிதி ஊழலில் பாஜக
Social Vision April 10, 2024 April 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில்  பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025
தமிழ்நாடு

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய எட்டு வயது பள்ளி மாணவி

November 9, 2025
மாவட்டங்கள்

கும்பளப்பாடி கிராமத்தின் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் 

February 9, 2026
விளையாட்டு

தருமபுரி போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பரிசு வழங்கினார்.

June 23, 2024
ஆன்மிகம்

அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.

February 18, 2024
சாதனையாளர்கள்

ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்

December 19, 2023

மேலும் படிங்க

அரசியல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  தீவிரவெற்றி பெற செய்ய வேண்டும் மஜக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

February 18, 2026
அரசியல்

மநீம தலைவர் கமல்ஹாசன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பு 

February 13, 2026
அரசியல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினால் மாவட்டம் வளர்ச்சி பெரும்: செளமியாஅன்புமணி 

February 8, 2026
அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?