மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமூக நீதி பேசும் பாமக… மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ? அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சமூக நீதி பேசும் பாமக… மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ? அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி
மாவட்டங்கள்

சமூக நீதி பேசும் பாமக… மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ? அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Social Vision
Last updated: 2024/04/08 at 9:30 AM
Social Vision
Share
5 Min Read
SHARE

சமூக நீதி பேசும் பாமக…மனுநீதி பேசும் பாஜக உடன்‌ கூட்டணி வைத்து ஏன் ?

அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து, வாக்கு சேகரித்து , தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சருமான, உதயநிதி ஸ்டாலின், பேசியதாவது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

கடந்த 15 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் ஈரோடு, நாமக்கல்,சேலம் ,ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளேன்.தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறசெய்யவேண்டும்.
நீங்கள் இந்தியா கூட்டணிக்கு போடுகின்ற ஓட்டு, மோடிக்கு வைக்கின்ற வேட்டு, கடந்த 2019 ம் ஆண்டில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், 72 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மணியை 3 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். மீண்டும் ஏமாறவேண்டாம்.என பேசினார்.
தருமபுரியில் சிப்காட் வளாகத்திற்கு சாலை அமைக்க ரூ 11 கோடி நிதி ஒதுக்கி வேலை நடைபெற்றது.மேலும் நிறுவனங்கள் வர நடவடிக்கை எடுக்கப்படும்.தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ 36 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் அமைக்கப்பட்டது.தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ 20 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது.ரூ 1 கோடி மதிப்பீட்டில் தருமபுரி பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டது.தொப்பூர் கனவாயில் விபத்தை தடுக்கும் வகையில் உயர்மட்ட பாலம் மைக்க, தமிழக முதல்வர் முயற்சியாலும் செந்தில் குமார் எம்பியாலும் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற உள்ளது.ரூ 7750 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் குடிநீர் இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட உள்ளது.மொரப்பூர்- தருமபுரி அகல ரயில்பாதை திட்டம் அமைக்கும் பணி நடைபெற்றவருகிறது.தருமபுரி சேலம் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக அமைக்க பணிநடைபெற்றுவருகிறது.மலைகாலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்நிரப்பும் திட்டம் நிறைவேற்றபட உள்ளது.என தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் மோடி அரசு வீட்டில் மூடங்கி இருக்க சொன்னது.வேலை இல்லாமல் வீட்டில் இருந்த மக்களுக்கு மோடி அரசு நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய அவர் கடும் நிதிநெருக்கடியிலும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கியது என தெரிவித்தார்.
ஆட்சிக்குவந்தவுடன் பெட்ரோல் விலை ரூ 3 ஆக குறைத்துள்ளோம்.தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் விடியல் பயணம் அமல்படுத்தினோம்.புதுமைபெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கிவருகிறது.இந்த திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1 கோடியோ 16 இலட்சம் பெண்களுக்கு மாதம் 15 ம் தேதிக்குள் மாதம் ஆயிரம் வழங்கி வருகிறோம்.தருமபுரி மாவட்டத்தில் 3 இலட்சம் பெண்கள் பயன்பெற்றுவருகின்றனர்.இந்தியாவிலேயே முதன் முறையாக காலை உணவு திட்டம் அமல்படுத்தியது திராவிட மாடல் அரசு அரசின் சாதனைகளை சொல்லி பெருமிதம் கொண்டார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 75 ,டீசல் ரூ 65 கும்,கேஸ் ரூ 500 க்கு வழங்குவோம்.என தெரிவித்தார்.


1989 ம் ஆண்டு வன்னிய சமூக மக்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கியது கலைஞர். 1987 ம் ஆண்டு இட ஒதுக்கீடு கேட்டு போராடியவர்களில் 21 பேரை சுட்டுக்கொன்று அதிமுக அரசு ,21 பேர் இறந்த தியாகிகள் நினைவாக தமிழ்நாடு அரசு விக்கரவாண்டியில் விரைவு மணிமண்டபம் கட்டிவருகிறது.
சமூகநீதி பேசிவரும் பாட்டாளி மக்கள் கட்சி மனுநீதி பேசும் பாஜக உடன் கூட்டிணைப்பு ஏன் என கேள்வி எழுப்பினார்.
தில்லியில் ஆயிரம் கோடியில் பாராளுமன்ற அமைக்கப்பட்டது.திறப்புவிழாவில் கனவரை இழந்தவர் என்பதால் குடியரசு தலைவரை அழைக்கவில்லை. இதுதான் பாஜகவின் சமூகநிதி,
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிரானது பாஜக அரசு, அரசியல் அமைப்பு சட்டம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என சொல்கிறது.
சமீபத்தில் தொலைகாட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பாஜகவுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு புஜ்யத்திற்க்கு கீழ் என பதில் அளித்தார்.இப்போது தேர்தலுக்காக ஆயிரம் மதிப்பெண் என்று சொல்லுவார்.கடந்த 2021 ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் 10.5 சதவீதம் வன்னியர் சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினார்.என சொல்லி அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்தனர்.சட்டரீதியான முறையில் உள் ஒதுக்கீடு செய்யாததால் அது நடைமுறைக்குவரவில்லை.திமுக சட்ட போராட்டம் நடத்தி 10.5 உள்ஒதுக்கீடு பெற்றுதருவோம் என வாக்குறுதியளித்தார்.
நீட்தேர்வில் 21மாணவிகள் இறந்துள்ளனர்.
10 ஆண்டுகள்பாஜக அரசு எதையும் செய்யவில்லை. மனிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசால் 6 மாதம் திட்டமிட்ட வன்முறை பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டது‌. தொலைகாட்சிக்கு அனுமதி இல்லை. இரண்டு பெண்கள் நிர்வாண படுத்தி அடித்து இழுத்து சென்றனர்.
மீன்டும பிஜேபி ஆட்சி அமைந்தால் மனிப்பூர் நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்படும். மனிப்பூரில் உள்ள 20 விளையாட்டு வீரர்களுக்கு 20 நாள் பயிற்சி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 6 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டும்,நிதிஒதுக்கவில்லை.அதன்பின் ஒன்றிய அரசு 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி கோபம் வருகிறது.9 ஆண்டுகள் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது.

மோடிக்கு 29 பைசா என பெயர் வைத்துள்ளனர்.இந்த பெயருக்கு காரணம் உள்ளது .
ஜிஎஸ்டியாக ரூ 1 தமிழக கொடுத்தால் தமிழ்நாட்டிற்கு 29 பைசா தருகின்றனர் பாஜக ஆட்சியில் உள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்தனாருக்கு
3 ரூ வழங்குகிறார். மூன்று மடங்கு தருகிறார் குஜாரத்துக்கு ரூ 7 தருகிறார்
அதிமுக எடப்பாடி பழனிசாமிதான் மாநில உரிமைகளை அடகு வைத்தார்.
சிஏஜி அறிக்கை, தனிக்கை குழு கணக்கு 9 வருடத்தில் 7 அரை இலட்சம் கோடி இல்லை ஊழல் நடந்துள்ளதாக சொல்லியிருக்கிறது. இறந்து போனா 88 ஆயிரம் பேருக்கு காப்பீடு செய்து மோசடி செய்துள்ளனர்.
பிஎம் கேர் நிதி 34 ஆயிரம் கோடி கணக்கு கொடுக்க முடியாது என்கிறார் மோடி
எனவே மாநில அரசின் உரிமைய பறிக்கின்ற மோடி அரசையும் மோடிக்கு அடிமையாக உள்ள அதிமுகவை தோற்க்கடிக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் , தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்வி.எஸ்.செந்தில்குமார் தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கே.தருண் ,தருமபுரி நகர செயலாளர் நாட்டான்மாது,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வன் எம்.ஜி.சேகர்,வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் தர்மசெல்வன் ,இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கட்டேசன் ,ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, ஏ.எஸ்.சண்முகம்,வைகுந்தம்,மல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் த.கு.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

TAGGED: @uthaya, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டம், தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
Social Vision April 8, 2024 April 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு

June 11, 2024
மாவட்டங்கள்

மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 

February 20, 2024
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
தொழில்

சனலில் இவ்வளவு அழகான டிசைன் பைகள் அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்

December 19, 2023
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

September 29, 2024
தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழஙககோரி மறியல் போராட்டம்.

February 21, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?