தருமபுரி அதிமுக வேட்பாளர் இரா.அசோகனுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்கள் ஆதரவு
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மருத்துவர் இரா.அசோகன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.தங்கதுரை தருமபுரிஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ அவர்களை,தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் சந்தித்து, நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் இர. அசோகன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக விவசாயிகள் பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன் ,அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்,அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின், மாவட்டதலைவர்,ரா.செல்வகுமார்,மாவட்டபொருளாளர் நா.அப்பு(எ)சுரேஷ், மாவட்டதுணைதலைவர் ச.லியாகத்அலி, மாவட்ட செயலாளர் TUCCதொழிற்சங்கம் பி.ரங்கநாதன், தருமபுரி ஓன்றிய செயலாளர் எம்எஸ்.அரவிந்தன், அரூர் ஓன்றிய செயலாளர் எஸ்.செல்வராசு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

