மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா ?
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா ?
அரசியல்

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா ?

Social Vision
Last updated: 2024/03/25 at 7:35 AM
Social Vision
Share
3 Min Read
SHARE

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா ?

தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்.

எனது அன்பிற்கினிய மக்களுக்கு வணக்கம்!

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு விளக்கமாக இதை பதிவு செய்கிறேன்.
நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 25 வருடங்கள் ஆகிறது. மாநிலச் செயலாளர் ,தேசிய செயலாளர் போன்ற உயர் பதவிகளை எனது கட்சியின் தலைமை வழங்கியது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் என்ற உயரிய பதவியையும் எனக்கு வழங்கியது. அதற்கு எல்லாம் மேலாக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியை மத்தியில் ஆளும் பாஜக அரசு எனக்கு வழங்கியது. மேலும் என் தாய்மொழி தமிழ் மொழியில் பேசுகின்ற பாண்டிச்சேரி மாநிலத்திலேயே பணியாற்றுகின்ற வாய்ப்பையும் பாஜக அரசு எனக்கு வழங்கியது. தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு மாநிலங்களை ஆளுகின்ற உயரிய ஆளுநர் பொறுப்பை எனக்கு மத்திய அரசு வழங்கியது. ஆளுநர் என்றாலே பெருமிதம் புகழ் அதிலும் இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா ? அதற்கான மரியாதையும் மகுடமும் மிகவும் உயர்ந்தது அல்லவே. அதை பணிவோடு ஏற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வந்தேன்.
ஒரு ஆளுநராக முன் உதாரணமான பல சீரிய திட்டங்களை நான் செயல்படுத்தினேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர்.

இதையும் படிங்க

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 
65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

தற்போது தேர்தல் காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தப் புகழ் தொடர வேண்டும். மீண்டும் திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக அரிய அணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவி நான் துறந்தேன். நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும். வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும் என்ற காரணத்தினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். தேசிய நீரோட்டத்தில் தென்சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறு நடை போட வேண்டும் என்ற சிந்தனையால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். எனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தென்சென்னை மக்கள் எனக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நான் நிற்கின்றேன்.
ஆளுநராக இருந்த நான். உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்.
விரும்பி வந்திருக்கின்றேன். வெற்றியை தாருங்கள். உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன்.

நன்றி….

இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி.
Dr. தமிழிசை செளந்தரராஜன்.

என்று தன் x தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: bjp, தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழிசை பிஜேபி, தமிழ்நாடு பிஜேபி, பிஜேபி
Social Vision March 25, 2024 March 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து 

March 18, 2025
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025
தமிழ்நாடு

பிப்-24 – ல் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் கண், இரத்ததானம் செய்வீர்: எடப்பாடி கே.பழனிசாமி 

February 18, 2024
பிரஜ்வல் ரேவண்ணா
அரசியல்

கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு `2976 பாலியல் வீடியோக்கள்’ – தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடிதமெழுதிய பாஜக நிர்வாகி.

April 29, 2024
தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.

March 9, 2024
தமிழ்நாடு

ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 

December 17, 2025

மேலும் படிங்க

அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026
அரசியல்

வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 

May 10, 2026
அரசியல்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

May 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?