மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமலஹாசன்
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
என் அரசியல் எதிரி சாதியம்தான். மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். மோடி பிரதமர் என்பதற்காக தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன். என்று நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

