காரிமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி.
காரிமங்கலத்தில் மாநில ஊரக மற்றும் நகர்புர வாழ்தார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் காரிமங்கலம் ஒன்றியம் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார். முன்னதாக காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். இப்பேரணி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி காரிமங்கலம் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு நடத்தப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் உயர் திரு.உதவி திட்ட அலுவலர் நகர்புற வாழ்வாதார இயக்கம் முருகேசன் அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் உயர் திரு.வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி சார் கலந்து கொண்டார் , மற்றும் வட்டார இயக்க மேலாளர் திரு. சிவலிங்கம் கலந்து கொண்டார் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

