அரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.
அரூரில் மாநில ஊரக வாழ்தார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாச்சியர்
வில்சன்ராஜசேகர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கிவைத்தார். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். இப்பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி கச்சேரிமேடு, பேருந்து நிலையம், திருவிக நகர், உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டனார். இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்குமரன், உதவி திட்ட அலுவலர்கள். ரா. செங்குட்டுவேல், ரா. சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

