புதிய கருதுகோள்களும் மேலும் வலுசேர்க்கும் ; தாய்வழிச் சமூகம் – வாழ்வும் வழிபாடும்
தாய்வழிச் சமூகம், காலப்போக்கில் தந்தைவழிச் சமூகமாக மாறியபோதிலும், தாய்வழிச் சமூகத்தில் தாய் பெற்றிருந்த முதன்மையை, அதன் நெறியை, நிலைத்த தன்மையை இன்றும் முழுமுதற் எச்சங்களாகப் பரவலாக பேரரசின் பெருங்கோயில்கள் முதல் பல்குடிகளின் வழிபாடுகள் வரை காண முடிகிறது. இந்நிலையில் அந்தத் தொன்ம சடங்கு மற்றும் வழிபாட்டு நிலையிலும், கலைகளிலும், அகழ்வுகளில் கிடைக்கும் தொல்பொருட்களிலும் காணப்பெற்றமையை தொகுத்தும், விளக்கியும் தாய்வழி சமூகத்தின் உயர்நனி சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை உய்த்துணரும் முருகியல் உணர்வுகளுக்கு இந்நூல் ஆய்வுகளும், அதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய கருதுகோள்களும் மேலும் வலுசேர்க்கும் எனக் கருத இடமுண்டு.
நூல்: தாய்வழிச் சமூகம் – வாழ்வும் வழிபாடும்
வகைமை: பண்பாட்டியல்
ஆசிரியர்: கோ.சசிகலா
வெளியீடு: தடாகம்
விலை: ₹160
நூலைப் பெற: 9790443979

