மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கோடையில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > கோடையில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஆரோக்கியம்

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Social Vision
Last updated: 2024/03/19 at 10:24 AM
Social Vision
Share
2 Min Read
நுங்கு
SHARE

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 

கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமைதரும் பொருள்களில் நுங்கு இன்றியமையாததாகிறது. பனைமரத்திலிருந்து பெறப்படும் பனைவெல்லம், பனங்கற்கண்டு பனங்கிழங்கு, பதநீர் வரிசையில் நுங்குவும் எண்ணற்ற மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. எல்லோரும் நுங்கு சாப்பிடும் போது அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் சதை பகுதியை மட்டும் சாப்பிடுவோம். ஆனால் துவர்ப்பாக இருக்கும் நுங்கின் தோல்பகுதியில் தான் கால்சியம், பாஸ்பரஸ் , வைட்டமின் பி, சி போன்றவை அடங்கியிருக்கின்றன. இனி நுங்கை சாப்பிடும் போது தோலோடு சாப்பிட பழகுங்கள். கோடையில் மட்டுமே கிடைக்கும் நுங்கு கோடையால் உண்டாகும் உடல் பிரச்சனைகளை களைவதோடு அதை தீர்க்கவும் பயன்படுகிறது.

நுங்கு

நுங்கினால் ஏற்படும் நன்மைகள்

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்கள் எளிதில் சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு உள்ளாவார்கள். கோடையில் வாட்டி வதைக்கும் அம்மை நோய்கள் வராமல் தடுக்க நுங்கு பயன்படுகிறது. அம்மை நோய்க்கு சிறந்த மருத்துவ காரணியாக நுங்கு பயன்படுகிறது.

நுங்கு

கோடையில் எவ்வளவு நீர் உடலில் இருந்தாலும் நீர் பற்றாக்குறை ஏற்படும்.  நுங்கில் சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட  தாதுக்கள் உள்ளதால் இவை நீரிழிப்பு அபாயத்திலிருந்து காக்கிறது. நுங்கு சாப்பிட்டு வந்தால் தாகம் தணிவதோடு நீர்ச்சத்து இழப்பு உண்டாகாது. உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது. கோடையில் காரமான உணவு உண்பதால்  வயிற்றுபிரச்சனை, செரிமானக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் பெரிய அளவில் ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும். மேலும் குடல் இயக்கத்தை சீராக வைக்க நுங்கு உதவுகிறது.

நுங்கு

தினமும் நுங்கு எடுத்துகொள்வதன் மூலம் அல்சர் தீவிரமாகாமல் கட்டுப்படுத்தப்படுகிறது . வயிற்றுப்புண், குடல்புண் ஆறுவதற்கும் பயன்படுகிறது. கல்லீரலில் இருக்கும் நச்சை நீக்கி கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவுகிறது. குடலில் இருக்கும் கழிவுகளும் வெளியேற்ற உதவுகிறது. நெஞ்சு முதல் வயிறு வரை எரிச்சல் இருப்பவர்களும் நுங்கு உண்ணலாம். மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்னும் வேதிப்பொருள் நுங்கில் இருக்கிறது. இந்த ஆன் தோசயனின் என்னும் வேதிபொருளானது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. கூடுதலாக இவை இதய நோய்களையும் குறைக்கின்றன. கோடை காலத்தில் குளிர்ச்சி என்று உடலுக்கு கேடு தரும் இரசாயண பாணங்களை குடிப்பதை விடுத்து, இத்துணை பயன்பாடுகளை கொண்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுங்கு உண்பதை தவிர்க்க வேண்டாம்.

TAGGED: nungu, கோடையில் நுங்கு, நுங்கு
Social Vision March 19, 2024 March 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

September 14, 2025

September 14, 2025
மாவட்டங்கள்

பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

June 9, 2024
அரசு நல திட்டம்தொழில்

நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 

June 28, 2024
தமிழ்நாடு

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் பாமக நிறுவனர் இராமதாஸ் கண்டனம் 

November 15, 2024
தமிழ்நாடு

16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

September 24, 2025
மாவட்டங்கள்

இருளர் இன மக்களின் பட்டா நிலத்தில் யானை தடுப்பு குழி வெட்டுவதை கைவிடகோரி மலைவாழ் மக்கள் சங்கம் மனு.

March 5, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?