மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் 
மாவட்டங்கள்

தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் 

Social Vision
Last updated: 2024/03/18 at 3:19 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் 
தருமபுரி நகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள தருமபுரி நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர் தொடங்கி வைத்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, அறிவுறுத்தலின் பேரில், தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்  தருமபுரி  பூ மாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் தொடங்கி நான்கு ரோடு, மத்திய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூமாலை வணிக வளாகத்தை சென்றடைந்தது. இந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தில்  சுமார் 150 -க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 100% வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வாக்காளர் உறுதிமொழியான மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் ‘குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம். என்ற உறுதிமொழியினை மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர் வாசிக்க மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,உதவிதிட்டஅலுவலர்கள் பா.சஞ்சீவிகுமார் மற்றும்கா. முருகேசன், வட்டார இயக்க மேலாளர்கள்,வட்டாரஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
TAGGED: சுதந்திரமான, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் புகார் அளிக்க வேண்டிய அலைபேசி எண்கள், தருமபுரி பாராளுமன்ற பொதுத்தேர்தல், நியாயமான மற்றும் அமைதியான தேர்தல், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 100% வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
Social Vision March 18, 2024 March 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 

October 19, 2025
மாவட்டங்கள்

பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

January 6, 2025
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
மாவட்டங்கள்

திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு சிபிஐ(எம்.எல்) தலைவர்கள் வாழ்த்து 

March 27, 2024
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
மாவட்டங்கள்

நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?