நாளை வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர் வெளியீடு
கங்குவா படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகுகிறது. பீரியடிக் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் ஹாட் அழகி திஷா பதானி நடிக்கிறார்.

சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர். நாளை மாலை கங்குவா படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக டீசர் வெளிவரவிருக்கிறது.

