மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.175 கோடி வசூல்
மலையாள மொழி ‘திரில்லர்’ படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. தமிழகத்தில் 500 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தை இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 3 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

