மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா,கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா,கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா,கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Social Vision
Last updated: 2024/03/18 at 1:35 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா,கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திர திருவிழா

இதையும் படிங்க

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஆட்டுக்கடா வாகனத்தில் சாமி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று ( செவ்வாய்க்கிழமை) நரி வாகன உற்சவமும், நாளை ( புதன்கிழமை ) பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) நாக வாகன உற்சவமும் நடக்கிறது. வருகிற 22-ம் தேதி காலை பால்குட ஊர்வலமும், இரவு சாமி திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில்வாகனத்தில் சாமி உற்சவமும் நடக்கிறது. வருகிற 23-ம் தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.

தேரோட்டம்

 

விழாவில் முக்கிய நாளான வருகிற 24-ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி மகாராதத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து பெண்கள் மட்டும் நிலைப் பெயர்க்கும் தேரோட்டமும், மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
வருகிற 25-ம் தேதி வேடர்பறி உற்சவமும், 26-ம் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 27-ம் தேதி சயன உற்சவமும், 28-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

TAGGED: இந்து சமய அறநிலைத்துறையினர், தருமபுரி அன்னசாகரம் பங்குனி உத்திர திருவிழா, பங்குனி உத்திர தேரோட்டம், பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும், விழா குழுவினர்
Social Vision March 18, 2024 March 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உயிருக்கு உலை வைக்கும் புகையிலை வேண்டாம், புகை பிடிக்காதே உன் வாழ்க்கையின் புன்னகையை இழக்காதே, போதைப் பொருட்களை நாடாதே சாவை தொடாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி நான்கு ரோட்டில் இருந்து நேதாஜி பைபாஸ் சாலை, நெசவாளர் காலனி, வள்ளலார் திடல் வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்று முடிவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன், நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டங்கள்

தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

June 22, 2024
தமிழ்நாடு

கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

October 18, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பிஎட் படிப்புக்கு  விண்ணப்பப்பக்க ஜூலை -21 வரை நீட்டிப்பு 

July 10, 2025
சினிமா

லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து 

March 6, 2025
தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டி பெண்காவலர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது

June 17, 2024
அரசு நல திட்டம்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.

July 9, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?