தருமபுரி பாராளுமன்ற தொகுதி, புகார் தெரிவிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கைபேசி எண்கள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம்,பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்
20.03.2024 (புதன்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
27.03.2024 (புதன்கிழமை)
வேட்பு மனுக்கள் பரிசீலனை,28.03.2024 (வியாழக்கிழமை)
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: 30.03.2024 (சனிக்கிழமை)
வாக்குப் பதிவு நாள்: 19.04.2024 (வெள்ளிக்கிழமை)
வாக்குகளை எண்ணும் நாள்: 04.06.2024 (செவ்வாய்கிழமை)
தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் நாள்: 06.06.2024 (வியாழக்கிழமை)
தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் அறிவிப்பு வெளியான நாளான இன்று 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் ஆகியவை பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பணிகள் முடிவு பெற்ற பின்னரே நடத்தப்படும் எனவும், அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறை தீர்க்கும் மனுக்கள் பெட்டியில் இடலாம் எனவும், அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி/பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது எனவும், கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும்பட்சத்தில், அவ்விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விளம்பரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்கவும் முடியும்.
பாராளுமன்றத்தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடைசெய்து ஆணையிடப்பட்டுள்ளது.
நாளது தேதியில், 10, தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 15,12,732 வாக்காளர்களில், 32,535 வாக்காளர்கள் 18-19 வயதிற்குட்பட்ட வாக்காளர்களாகவும், 3,11,422 வாக்காளர்கள் 20-29 வயதிற்குட்பட்டவர்களாகவும், 114 வாக்காளர்கள் 100 வயதிற்கு மேற்பட்ட வர்களாகவும், 13,367 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும், 176 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தனவர்களாகவும், 13394 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 1905 வாக்காளர்கள் Service Voters-ஆகவும், உள்ளனர். மேலும், 10,தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 1805 வாக்குச்சாவடிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 16.03.2024 இன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 15 பறக்கும் படை குழுக்களும் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் 11,660 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள C-Vigil App செயலியிலும் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7017 மற்றும் வாட்சப் குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள 9363754335 என்ற எண்ணுள்ள கைபேசியும் 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
10.தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுலவர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் – விவரம்
மாவட்ட அளவிலான அலுவலர்கள்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், கி.சாந்தி, :94441 61000.
மாவட்டகாவல்கண்காணிப்பாளர்,ஸ்டீபன் ஜேசுபாதம் :98844 47581
மாவட்ட வருவாய் அலுவலர், தருமபுரி.
பால் பிரின்ஸ்லி ராஜ்குமார்: 94450 00908.
மாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர் (பொது), தருமபுரி.சையது முகைதின் இப்ராகிம்: 94450 08135.
57. பாலக்கோடு
சட்டமன்ற தொகுதி
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.தனப்பிரியா,
தனித்துணைஆட்சியர்(சபாதி),தருமபுரி.: 9445461734
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கி.ஆறுமுகம்,வட்டாட்சியர், பாலக்கோடு.
:944500537
58.பென்னாகரம் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர் செ.நர்மதா,
உதவி ஆணையர் (ஆயம்),தருமபுரி.
9444555118
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
ஜெ.சுகுமார்வட்டாட்சியர், பென்னாகரம்
94450 00536
59. தருமபுரி,சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்ஆர்.காயத்ரி,
வருவாய் கோட்டாட்சியர், தருமபுரி.
94450 00428.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
பி.ஜெயசெல்வன்,வட்டாட்சியர்,தருமபுரி
9445000533
60.பாப்பிரெட்டிப்பட்டிசட்டமன்ற தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர்
பி.ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) 9894363737
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
ஆர்.சரவணன்,வட்டாட்சியர்,
பாப்பிரெட்டிப்பட்டி:9445000535
61. அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர் இரா.வில்சன் இராசசேகர்,வருவாய் கோட்டாட்சியர், அரூர் :9445461802
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
அ. இராதாகிருஷ்ணன்.வட்டாட்சியர், அரூர். : 94450 00534
85.மேட்டூர்தேர்தல்நடத்தும்அலுவலர்
என்.பொன்மணி,சார் ஆட்சியர்,
மேட்டூர் 9445000435
உதவிதேர்தல்நடத்தும்அலுவலர்
எஸ்.விஜிவட்டாட்சியர், மேட்டூர் : 9445000552
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, நேரில் பார்வையிட்டார்
இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார்,வட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஆர்.பிரியா, மேட்டூர் சார் ஆட்சியர் என்.பொன்மணி, உதவி தேர்தல் அலுவலர்கள், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ. அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

