மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.
தமிழ்நாடு

தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

Social Vision
Last updated: 2024/03/16 at 5:59 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டம், பென்னாகரம் வனச்சரக வனப்பகுதியில் உள்ள யானை கூட்டத்திலிருந்து சுமார் 20-25 வயதுடைய ஆண் யானை ஒன்று பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியேறி பாலக்கோடு வனச்சரக எல்லைப்பகுதியில் நுழைந்தது. அதே யானை 03-03-2024 அன்று தேசிய நெடுஞ்சாலை எண்- 44 வழியே 25 கி.மீ. தூரம் இரவு நேரத்தில் பயணம் செய்து தருமபுரி நகரப்பகுதிக்கு அருகில் வந்ததால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டதுடன் காட்டு யானையின் பாதுகாப்புக்கும் பாதகமான சூழ்நிலை நிலவியது.
மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் காட்டு யானை இருப்பதால் பொது மக்கள் மற்றும் காட்டு யானையின் பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது. இதுதொடர்பாக காட்டு யானையை மீண்டும் காப்புக்காட்டு பகுதிக்குள் விரட்டுவதற்கு வனப்பணியாளர்களால் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி மாவட்ட நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு காவல்துறை மற்றும் மின்சாரத்துறையினர் ஆகியோருடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் யானைக்கு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் பாதுகாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் பத்மா,  தலைமையில் தருமபுரி மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், உதவி வனக்கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ், யானைகள் கண்காணிப்பு குழுவினர் முன்னிலையில் உதவி வனப்பாதுகாவலர்கள் வின்சென்ட் மற்றும் சி.சரவணன், வனச்சரக அலுவலர்கள் அருண்பிரசாத், மற்றும் மு.ஆனந்தகுமார் மற்றும் ஒசூரில்
இருந்து வந்த யானை கண்காணிப்பாளர்கள் ஒன்றினைந்து 12 நாட்களாக சுற்றித்திரிந்த யானையினை கண்காணித்து மீண்டும் பென்னாகரம் வனப்பகுதிக்கு விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் யானை மீண்டும் பொது மக்கள் வசிக்கும் இடத்திற்கு வந்தது.
இதற்கிடையில் இது தொடர்பாக அரசு கூடுதல் முதன்மை செயலர் சாகு. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மொஹபத்ரா, மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக்காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி.  ஆகியோரிடையே விவரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், யானை மற்றும் களப்பணியாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்யஅறிவுரை பெறப்பட்டது. மேலும், இது தொடர்பாக யானையை அதற்கே உரிய வாழிடத்திற்குள் இடமாற்றம் செய்திட தருமபுரி மண்டல வனப்பாதுகாவலரால், சென்னை தலைமை வனஉயிரினக்காப்பாளரிடம் இருந்து அனுமதி பெற்றார்.
கடந்த 2 நாட்களாக மொரப்பூர் வனச்சரக கட்டுப்பாட்டு பகுதி அருகில் பொதுமக்கள் வாழும் இடத்தில் தொடர்ந்து யானை நடமாட்டம் இருந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எனவே மக்களின் அச்சத்தை போக்கவும். காட்டு யானையின் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் பொருட்டும் கால்நடை மருத்துவர்கள் டாக்டர் பிரகாஷ்., மற்றும் டாக்டர் கலைவாணன் ஆகியோர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், தலைமையில் இன்று 16-03-2024 அதிகாலையில் மொரப்பூர் வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள சில்லாரஅள்ளி கிராமப்பகுதி அருகில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையினை பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து யானையின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, சீரான நிலையில் உள்ளதை உறுதி செய்த பின்னர் பிடிக்கப்பட்ட யானை காலை 09.00 மணியளவில் வனப்பகுதியில் சுமார் 55 கி.மீ. தொலைவில் பாதுகாப்பாக மயக்கம்தெளிவதற்கான மருந்துகள் செலுத்தி தகுந்த வாழிடத்தில் நீர்நிலைக்கு அருகில்அதன் இயற்கையான வாழிடத்தில் நல்ல நிலையில் விடுவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வன கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரகாஷ் மற்றும்உதவி வனப்பாதுகாவலர், தருமபுரிதலைமையில், யானைகண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு யானை நடமாட்டம் ஒரு வார கால அளவில் கண்காணிக்க,அறிவுரைவழங்கப்பட்டுள்ளது.
TAGGED: Dharmapuri dfo, Dharmapuri district Paras department, ஒற்றை ஆண் எனையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி, தர்மபுரி அருகே ஒற்றை ஆண் யானை மக்களை அச்சுறுத்தி, தர்மபுரி அருகே சுற்றித்திரிந்த யானை பிடிபட்டது, தர்மபுரி மண்டல வன பாதுகாப்பு அலுவலர், தர்மபுரி மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர், தர்மபுரி மாவட்ட வனத்துறையினர், பொதுமக்கள் எச்சரிக்கை இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தல், யானைக்கு மருத்துவ மயக்கு ஊசி போட்ட மருத்துவர்கள்
Social Vision March 16, 2024 March 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ரெயின்போ வேர்ல்ட்” பொழுதுபோக்கு பூங்கா திறப்பு 

March 1, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026
L-Murugan-MP
அரசியல்

மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்

February 14, 2024
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

March 13, 2024
மாவட்டங்கள்

புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.

March 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 16, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?