கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, கடந்த மாதம் 2 ஆம் தேதி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சதாசிவ்நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், எடியூரப்பா மீது 354 A IPC (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சதாசிவநகர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

