மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இனிமேல் இ- சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > இனிமேல் இ- சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு

இனிமேல் இ- சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/03/13 at 2:39 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
இனிமேல் இ- சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இனி இ-சேவை மையங்கள் மூலமாகவும்  LLR (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre – களையும்  பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள்  அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
அதனடிப்படையில்  தமிழ்நாடு முதல் அமைச்சரின் ஆணைப்படியும்,  போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம்  முழுவதிலுமுள்ள 55,000 – க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR ( வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் ) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக        ரூ.60 –ஐச் செலுத்த வேண்டும்.  ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR –ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் ( Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு   நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்திதெரிவித்துள்ளார்.
TAGGED: Driving licence, E sevai maiyam, Heavy driving licence, LLR training centre, Road transport office
Social Vision March 13, 2024 March 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரியில் நவம்பர் புரட்சி தினவிழா 

November 7, 2025
மாவட்டங்கள்

சின்னாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

January 3, 2025
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.ஸ்டாலின்

June 19, 2024
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024
குற்றம்தமிழ்நாடு

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு தனியார் பள்ளி மது நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்:மரு.இராமதாஸ் வலியுறுத்தல்

January 3, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?