மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
தமிழ்நாடு

சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

Social Vision
Last updated: 2024/03/11 at 2:02 PM
Social Vision
Share
3 Min Read
கனிமொழி கருணாநிதி எம்.பி
SHARE

சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் இணைந்து ‘அவளதிகாரம்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குக் கனிமொழி எம்.பி பதிலளித்தார். முன்னதாக பல்கழைக்கழக மாணவர்களால் எடுத்த பெண்களின் புகைப்படக் கண்காட்சி கனிமொழி எம்.பி பார்வையிட்டார்.

சென்னை பல்கலைக்கழக வளாக இயக்குநர் Dr.சு.அம்ஸ்ட்ராங், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியது;

இதையும் படிங்க

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

மிகப்பெரிய பாரம்பரிய சென்னை பல்கலைக்கழகத்தில் பேசக்கூடிய வாய்ப்பை பெறுமையாக கருதிகிறேன்.எத்தனையோ சிந்தனையாளர்களை, இந்த சமூகத்தை மாற்ற இருக்கக்கூடிய சிந்தனைகளை முன்வைத்த எழுத்தாளர்களை கவிஞர்களை பணியாற்றக்கூடிய ஊடகத்துறையை சேர்ந்த நண்பர்களை இந்த சமூகத்திற்கு வழங்கி இருக்கக்கூடிய பல்கலைக்கழகம் இந்த சென்னை பல்கலைக்கழகம்.

கனிமொழி கருணாநிதி எம்.பி

மகளிர் தினத்தை மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து நடத்துவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய பேரிடம் மகளிர் தினத்திற்கும், காதலர் தினத்திற்கும் பெரிய வித்தியாசம் வந்துள்ளது. மகளிர் தினத்தன்று மகளிர் தினம் என்பது ஒரு சகோதரியை, தாயை, மகளை போற்றக்கூடிய தினம் இல்லை.

ஆண்களோடு சமமாக இருக்க கூடிய பெண்களுக்கான தினம் உங்களுக்கு முன்னாடி நடக்கக்கூடிய பெண்களுக்கான தினம் தான் மகளிர் தினம் எனவும், அன்னையர் தினம் காதலர் தினத்தை எல்லாம் கடந்து வந்து மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நான் அரசியல் பேச வரவில்லை, ஆனால் அரசியல் பேசாமல் இருக்க முடியாது, நம்மை சுற்றியுள்ள அனைத்திலும் அரசியல் இருக்கிறது.

கனிமொழி கருணாநிதி எம்.பி

சில தினங்களுக்கு முன்னால் மகளிர் தினத்தன்று இந்த நாட்டில் ஒன்றிய அரசாங்கம் பெண்களுக்கு பரிசு கொடுத்தது.‌ சமையல் எரிவாயு 100 ரூபாய் குறைத்தது தான். மகளிர் தினத்திற்கு அரசாங்கம் ரொம்ப சிந்தித்து 100 ரூபாயை குறைத்து பரிசாக கொடுத்துள்ளது. சமையலறையில் மட்டும்தான் அவர்களுடைய வாழ்க்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு ஒன்றிய அரசு செய்யக்கூடிய விஷயம் இதுதான். எவ்வளவு மாற்றம் வர வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் என கூறினார். தந்தை பெரியார் சொன்னது போல பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கி எடுத்து விட்டு, புத்தகங்களை கையில் கொடுங்கள் என்று சொன்னது திராவிட இயக்கம்.

தந்தை பெரியார் சொன்னது போல் ஆண்மை அழிந்தால் தான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆண்மையை தான் அடக்க வேண்டும் என்று சொன்னாரே தவிர ஆண்கள் அழிய வேண்டும் என்று சொல்லவில்லை.உண்மையான பெண் விடுதலை என்றால், இரண்டு பேருக்குமான சமமான தளத்தில் சமமான உரிமை கிடைக்கும் பொழுது உங்களுக்கும் எங்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி

இந்தியாவில் பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் மாநிலம் தமிழ்நாட்டில் தான். அதே நேரத்தில் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று மறுக்கக்கூடிய நினைக்கக்கூடிய சமுதாயமாகமும் இருக்கிறது. டெல்லியில் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலால் போராடினார்கள், அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் தவறு செய்தால், பாதுகாப்பாக இருக்கிறார்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை.

அம்பை எழுத்தாளரின் சிறுகதையில் ஒரு வீட்டில் பெண், தோசை ஒரு நாளைக்கு எத்தனை சுடுகிறாள் அப்போ ஒரு வருடத்திற்கு எத்தனை தோசை சுடுவாள். என்று எழுதியதை சக எழுத்தாளர்களே ஒரு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள் என பேசக்கூடியவை நிகழ்கின்றன, இந்த சமூக அடுக்குகள் உடையாமல் இருக்க சொல்லக்கூடியவைகள் என்றார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் அதற்கு காரணம் அந்த பெண்ணின் ஆடை தான் காரணமா?

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாகி ஊர்வலமாக இழுத்து வரப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு சம்பத்தை நடந்திருக்கிறது. அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை நாம் எப்படி வளர்க்கப்பட்டிருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த சமூகத்தில் ஆண்ணும் பெண்ணும் சமம் எது தடையாக வந்தாலும் அதை உடைத்தெறி என்று சொன்ன ஒரே தலைவன் தந்தை பெரியார் மட்டும் தான். பெரியாரைப் பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது ஆனால், பெரியாரை கற்றுக் கொள்ளுங்கள் இந்த சமூகம் மாற்றமடைய அவரிடம் நிறைய கருத்துக்கள் இருக்கிறது என்றார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி

தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி

பெண்கள் படித்தால் சுதந்திரம் கிடைக்கும்னு சொல்கிறார்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு?
சமூகத்தை மாற்ற வேண்டுமென நினைத்தவர்களை பற்றி படித்தால் தான் சமூக மாற்றம் ஏற்படும். என கனிமொழி எம்.பி பதில் அளித்தார்.

கனிமொழி கருணாநிதி எம்.பி

TAGGED: அவளதிகாரம், கனிமொழி எம்.பி, சர்வதேச மகளிர் தினம், சென்னை பல்கலைக்கழகம், னிமொழி கருணாநிதி, பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள், பெரியார் - கனிமொழி
Social Vision March 11, 2024 March 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

மீண்டும் தங்கம் விலை உயர்வு 

July 6, 2024
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.

June 19, 2024
தமிழ்நாடு

தருமபுரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  

December 2, 2024
தமிழ்நாடு

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா! ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை நடத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 14, 2025
அரசியல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தருமபுரி எம்பி ஆ.மணி 

June 7, 2024
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?