மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி : ஜப்பான் குழுவினர் ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி : ஜப்பான் குழுவினர் ஆய்வு
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி : ஜப்பான் குழுவினர் ஆய்வு

Social Vision
Last updated: 2024/03/11 at 2:48 PM
Social Vision
Share
4 Min Read
ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி
SHARE

ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி:ஜப்பான் குழுவினர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பென்னகாரம் வட்டம், பருவதனஅள்ளியில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ஆம் கட்டம் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து ஜப்பான் குழுவினர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் ஆனந்த் மோகன்,மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி முன்னிலையில் மார்ச்-11 இன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20.01.2022 அன்று காணொலி வாயிலாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்படும் குடிநீர் அளவை உயர்த்தி வழங்குவதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2-ஆம் கட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பருவதனஅள்ளி

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி நகராட்சி பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 251 ஊராட்சிகளிலுள்ள 2020 ஊரகக் குடியிருப்புகளுக்கும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் மாநகராட்சி கிருஷ்ணகிரி நகராட்சி 6 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலுள்ள 3074 ஊரக குடியிருப்புகளுக்கும். ஆகமொத்தம் மாநகராட்சி 2 நகராட்சிகள் 16 பேரூராட்சிகள் மற்றும் 6802 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் அளவை உயர்த்தி வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 19.18 இலட்சம் நபர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் குடிநீரும் அதன் பின்னர் 2056ம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 21.29 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 105.02 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

2041-2056 ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 18.42 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 154.11 மில்லியன் லிட்டர் குடிநீரும் அதன் பின்னர் 2056ம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 20.54 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 190.93 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

41.83 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 304.83 மில்லியன் லிட்டர் குடிநீர்

இவ்விரு மாவட்டங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் 2041-ஆம் ஆண்டு (இடைநிலை) மக்கள் தொகையான 37.60 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 251.60 மில்லியன் லிட்டர் குடிநீரும் அதன் பின்னர் 2056-ஆம் ஆண்டு (உச்சநிலை) மக்கள் தொகையான 41.83 இலட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 304.83 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.


ஒரு நபருக்கு 70 லிட்டரிலிருந்து 135 லிட்டராக உயர்வு

இரு மாவட்டங்களிலும் உள்ள ஊரகக் குடியிருப்புகளுக்கு தற்போதைய குடிநீர் வழங்கும் அளவான நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 30 லிட்டரிலிருந்து 55 லிட்டராகவும், பேரூராட்சி பகுதிகளுக்கு 50 லிட்டரிலிருந்து 70 லிட்டராகவும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு 70 லிட்டரிலிருந்து 135 லிட்டராகவும். அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.7890.00 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் – 2 ம் திட்டம்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழில் நுட்ப குழுவின் குறிப்புரைகளுக்கேற்ப ரூ.7890.00 கோடிக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஆரம்பநிலை திட்ட முன்மொழிவு அறிக்கை (Preliminary Project Proposal Report (PPPR)) பன்னாட்டு நிதி உதவி பெறும் திட்டத்தின் (External Aided Project (EAP)) கீழ் நிதியுதவி பெற இந்திய அரசின் இணையதளத்தில் முன்மொழிவு பதிவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழு கூட்டத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இத்திட்ட மதிப்பீடு JICA ன் (Jappan International Cooperation Agency) கள ஆய்வு 11.03.2024 அன்று நடைபெற்றது. இத்திட்டத்திற்கான நிதி ஆதாரம் மற்றும் அரசின் நிர்வாக ஒப்புதல் பெற்ற பின் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.


ஒகேனக்கல்லில் தலைமை பணியிடம் கட்ட தேவையான அரசு நிலம் ஒதுக்கீடு அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி கிராமத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிலம் ஒதுக்கீடு அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்திற்காக வனத்தில் குழாய்கள் அமைக்கும் பாதை நீருந்து நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட நில அனுமதியும் விரைவில் பெறப்பட உள்ளது.

இந்நிகழ்வில் ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், சங்கரன், பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், வட்டார வளரச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கணேஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TAGGED: ஒகேனக்கல் குடிநீர் 2- ம் திட்டபணி, பருவதனஅள்ளி
Social Vision March 11, 2024 March 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக பயிற்சி பெற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

June 28, 2024
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
மாவட்டங்கள்

மரத்தில் ஏறி தவறி கீழேவிழுந்த தொழிலாளி இறப்பு 

February 15, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவு  பென்னாகரத்தில் 16  மில்லிமீட்டர் மழை

July 16, 2024
மாவட்டங்கள்

பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

January 6, 2025
அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?