மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.
தமிழ்நாடு

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.

Social Vision
Last updated: 2024/03/11 at 2:32 PM
Social Vision
Share
4 Min Read
வாச்சாத்தி சம்பவம்
SHARE

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20, 21, 22 தேதிகளில் வனத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த 269 பேர்களால் கிராமத்தையே சீரழித்து, வீடுகளை உடைத்து நாசமாக்கினர். வீடுகளிலிருந்து பண்டபாத்திரங்களையும் நசுக்கி, உணவு தானியங்களையும் உண்ண முடியாத வகையில் சேதப்படுத்தினர். 18 இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர். குடிப்பதற்கு கூட குடிநீரில் ஆயில், ஆட்டுத்தோல், ஆட்டு குடல் கழிவுகளை கொட்டிவிட்டனர். மிகக்கொடூரமான சித்ரவதைக்கு ஆளக்கப்பட்டதுடன், மனித உரிமைகளை முழுமையாக மிறி, காட்டு மிராண்டிதனமான செயலில் ஈடுபட்டனர்.

வாச்சாத்தி சம்பவம்

வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற அநீதிக்கும் பாதிப்புகளுக்கும், வன்கொடுமைகளுக்கும், நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , தமிழ்நாடு மலைவாசங்கம் சங்கம் நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்தி பின்னர் சிபிஐ (மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உத்திரவிட்டது, கடந்த 31-ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து, மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ 10 இலட்சம் வழங்கவேண்டும்.இந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டும் ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் கிராமத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவும் கிராமத்திற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசுசெய்து கொடுக்கவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் தமிழக முதல்வரை சந்தித்து உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வாச்சாத்தி மக்களுக்கு நிவாரணம்,அரசு வேலை உள்ளிட்டவை வழங்கவேண்டும் என கடந்த ஒரு மாத்திற்க்கு முன்பு நேரில் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

வாச்சாத்தி சம்பவம்

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது போல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா 10 லட்சத்திற்கான காசோலை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து பிப்-9 அன்று வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று அரூர் கோட்டாட்சியர் வில்சன் வழங்கினார். இந்நிகழச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் தி.வ.தனுஷன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் அ.அம்புரோஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீதிகிடைக்க போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலைவாழ் மக்கள் சங்கத்திற்க்கும் நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கும் வாச்சாத்தி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு கூறுகையில்:

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாச்சாத்தி வழக்கின் மீது நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் நீதி அரசர் வேல்முருகன் அவர்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு உடனடியாக தலா ரூ 10 லட்ச ரூபாய் வழங்கிட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் மற்றும் வட்டாட்சியர் சரவணன் மில்லர் இவர்கள் வாச்சாத்தி கிராமத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட 18 பெண்களை அழைத்து அந்த கிராமத்திலே தலா 10 லட்ச ரூபாய் காசோலை வழங்கியதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில குழுவின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும் தமழ்நாடு முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாச்சாத்தி சம்பவம்

அதேபோல் உயர் நீதிமன்றத்தின் இதர தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களான பாதிக்கப்பட்ட குடும்பத்தில் குடும்பத்தினருக்கு ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பினை விரைந்து தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமாறு தமிழ்நாடு முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன். மேலும் வாச்சாத்தி கிராமத்திற்கு இதர கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். வேலை செய்து தன்னுடைய வாழ்நாளை ஜீவனம் செய்ய, பெண்களுக்கு குறிப்பாக கார்மெண்ட்ஸ் போன்ற ஒரு சிறு தொழில், அதேபோல் பால் சொசைட்டி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். விடற்ற மக்களுக்கு சமீபத்தில் வீடு வழங்கிட ஒரு சிலருக்கு வீடு வழங்கிய ஆணை பிறப்பித்துள்ளது, வரவேற்கத்தக்கது. இருப்பினும் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் தரமான வீடுகளை கட்டித் தர வேண்டுகிறோம், பழங்குடி மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயில் வீடு கட்டும், திட்டத்தின் அடிப்படையில் வாச்சாத்தி மக்களுக்கும் வழங்கவேண்டுகிறோம். நிலமற்ற வாசாத்தி குடும்பங்களுக்கு அரசின் புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலத்தில் தலா ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் நிலம் நிலமற்ற வாச்சாத்தி மக்களுக்கு அளிப்பதன் மூலமாக அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும்.எனவே இவர்களுக்கு நிலம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

TAGGED: காவல்துறை, சிபிஐ, தமிழ்நாடு மலைவாசங்கம் சங்கம், பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வனத்துறை, வருவாய்துறை, வாச்சாத்தி, வாச்சாத்தி இழப்பீடு, வாச்சாத்தி கிராமம், வாச்சாத்தி வன்கொடுமை
Social Vision March 11, 2024 March 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

January 7, 2025
குற்றம்தமிழ்நாடு

மீன்பாசி குத்தகை நீட்டிப்புக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க முன்னாள் தனி அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 

June 25, 2024
மேதின விழா
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

April 29, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு

July 28, 2024
உலகம்

பயங்கரவாத எதிர்ப்பு தின வரலாறு

May 20, 2024
ஆயுள் கைதிகள் விடுதலை
அரசியல்

நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!

February 7, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?