பனை குளம் கிராம மக்கள் இலவசவீட்டுமனைபட்டா கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பனை குளம் ஊராட்சிக்குபட்ட பனை குளம் கிராமத்தில் ஏழை மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள குடும்பங்களில் பலருக்கு விவசாய நிலம் இல்லை பலருக்கு வீடு இல்லை .இதனால் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக குடியிருந்து வருகின்றனர்.மழைகாலங்களில் குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.கூலிவேலை செய்துவரும் இம்மக்கள் குழந்தைகளை படிக்க வைக்கவும், நடைமுறை செலவக்கே பற்றாக்குறையில் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது.வீட்டுமனைபட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்.எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு வீடு வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

