தருமபுரி மாவட்டம் முன்னேற ,சாதிய கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார்.

மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு,இரா.சிசுபாலன்,மூத்ததலைவர் பி.இளம்பரிதி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து,வி.மாதன்,எம்.முத்து,சி.நாகராசன்,சோ.அருச்சுணன்,வே.விசுவநாதன்,எஸ்.கிரைஸாமேரி,ஆர்.சின்னசாமி,வி.ரவி,ஆர்.மல்லிகா,தி.வ.தனுசன்,இடைகமிட்டி செயலாளர்கள் தருமபுரி ஒன்றியம் என்.கந்தசாமி, பாலக்கோடு டி.எஸ்.ராமச்சந்திரன், தருமபுரி நகரம் சி.முரளி,சின்னம்பள்ளி சி.சக்திவேல்,ஏரியூர் என்.பி.முருகன், காரிமங்கலம் பி.ஜெயராமன்,அரூர் பி.குமார், மொரப்பூர் கே.தங்கராசு, நல்லம்பள்ளி எஸ்.எஸ்.சின்னராசு,இண்டூர் எம்.ராஜா, பென்னாகரம் நகரம் ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் பேசினர்.

கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முன்னணி ஊழியர்கள் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி நடத்திவருகிறது.காலையில் ஓசூரில் நடைபெற்று முடிந்து தற்போது தருமபுரி மாவட்டத்திலும் நடத்தியுள்ளோம்.பிஜேபியின் தலைவர் அண்ணாமலை நாவடக்கத்தோடு பேசவேண்டும்.அரசியல் அநாகரிகமாக பேசக்கூடாது.குறிப்பாக திமுக கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி பேசிவருகிறார்.இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார்.இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ள கூடாது.இவர் தன்னை திருத்தி கொள்ளவேண்டும்.இல்லை என்றால் நாங்கள் திருத்துவோம்.
தமிழகத்தில் பிஜேபி 40 தொகுதிகளிலும் தோற்பது, தேர்தலுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது.நடைபெற உள்ள தேர்தலில் பிஜேபியை டெபாசிட் இழக்கவைப்போம்.
ஆபாச படத்தை வெளியிடுவோம் என தர்மபுரம் ஆதினத்தை மிரட்டுகின்றனர்.காவல்துறை விசாரணையில், மிரட்டுவதே பிஜேபி கட்சியினர் என தெரியவந்துள்ளது.தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தார்.இவருக்கே இந்த கெதி என்றால் தமிழ்நாட்டு மக்கள் யோசிக்கவேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியிலும் எதிர் அணியினர் வெற்றி பெற்றனர்.சாதிய கூட்டணி பிற்போக்கு தனத்திற்கு இழுத்து செல்லும், மாவட்ட முன்னேற்றத்திற்கு பயன்படாது.
தருமபுரி மாவட்டம் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது.கிராமபுறங்களில் படித்த இளைஞர்களே இல்லை. எல்லோரும் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும், சென்றுள்ளனர்.சாதிய கூட்டணி பிற்போக்கு தனத்திற்கு இழுத்து செல்லும் எனவே சாதிய கூட்டணி பிஜேபி,அதிமுக வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.சாதிய கூட்டணியை தோற்கடிக்க கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.2 சீட் கொடுத்துள்ளனர்.அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதி என்பது முடிவாகும், திமுக கூட்டணி தேர்தல் கால கூட்டணி அல்ல,
மதச்சார்பின்மையை பாதுகாக்க,கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க, மொழிஉரிமையை பாதுகாக்க, மாநில உரிமை பாதுகாக்க, உருவான கொள்கை கூட்டணி .இதுவளுவான கூட்டணி என தெரிவித்தார்.

