மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்
ஆன்மிகம்

தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்

Social Vision
Last updated: 2024/03/01 at 2:45 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் குவிந்த பக்தர்கள்
அரூரை அடுத்த தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூர் – கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் 13- ஆவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம்கால பூஜைக்காக தீர்த்தமலை (தீர்த்தகிரி மலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தார்.
அந்த தீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும்.ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர்ஆகியோர் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும்.
தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திருக்கோயில் மாசிமக
தேர்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து
புதன்கிழமை (பிப்.28) இரவு 9 மணியளவில் சுவாமிகள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர் திருவிழாவில்,
அருள்மிகு விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் திருத்தேர்கள் கோயில் எதிரே நிறுத்தப்பட்டிருந்தன.தொடர்ந்து, பக்தர்கள் பொரி, உப்பு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவ தானியங்களை தேர்கள் மீது இறைத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமிகளை வழிபட்டனர்.
முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய சுவாமிகளின் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மூன்று தேர்களும் கோயிலைச் சுற்றிவந்து நிலையை அடைந்தன.
இந்த தேர்திருவிழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், பெங்களூரு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர் திருவிழாவுக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த விழாவில் கோட்டாட்சியர் ரா.வில்சன் ராஜசேகர், அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் பொன்மலர் பசுபதி, பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா து.தனபால், திமுக நகர செயலர் முல்லை ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரளா சண்முகம், செயல் அலுவலர் சொ.பிரபு, உதவி ஆணையர் மா.உதயகுமார், அரசு மருத்துவர் ஏ.இசைத்தமிழ், கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ குழுவினர், தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
TAGGED: Theerthamalai thirthagiri swara temple, அருள்மிகு தீர்த்தகிரிஸ்வரர் திருக்கோயில் மாசிமாக தேராட்டம், கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்
Social Vision March 1, 2024 March 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
தமிழ்நாடு

சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 – ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம். 

December 23, 2025
தமிழ்நாடு

ஜூன் 10 ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

May 30, 2024
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026
விளையாட்டு

தருமபுரி மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா 

July 22, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?